24 மணி நேரத்திற்கு அளவீடு எடுத்த மாசுக்கட்டுப்பாடு வாரியம்


, தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் ஏற்பட்ட ஒலி மற்றும் காற்று மாசை கண்டறியும் பணியில், மாசுக்கட்டுப்பாடு வாரியத்தினர் ஈடுபட்டனர்.தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் பட்டாசு, வெடி, மத்தாப்பு, வான வேடிக்கை கொளுத்துவது
முக்கிய இடம் பிடித்துள்ளது. இச்சமயத்தில், அதிக திறன் கொண்ட வெடிகள் வெடிப்பது மற்றும் மத்தாப்பு, புஸ்வாணம், வான வேடிக்கை போன்றவற்றால் ஒலி மற்றும் காற்று மாசடைவது தவிர்க்க முடியாததாக உள்ளது.ஒலி மற்றும் காற்றில் ஏற்படும் மாசின் அளவை கண்டறிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது நடவடிக்கை எடுக்கிறது. அவ்வகையில், திருப்பூர் குமரன் வணிக வளாகம், ஜெய்வாபாய் பள்ளி மற்றும் ராயபுரம் பகுதிகளில் மூன்றிடங்களில் "ரெஸ்பியரபிள் டஸ்ட் சேம்ப்ளர்' என்ற ஒலி மற்றும் காற்று மாசு அளவு கண்டறியும் கருவிகள் பொருத்தப்பட்டன.நேற்று காலை 6.00 மணி முதல் இன்று (14ம் தேதி) காலை 6.00 மணி வரையிலான 24 மணி நேர காலத்தில் திருப்பூரில் தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ள இடங்களில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசு அளவு கணக்கிடப்படுகிறது.

இக்கருவி மூலம் மோனோ மீட்டரில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒலி மாசு கணக்கிடப்பட்டது. மேலும், 4 மணி நேரத்துக்கு ஒருமுறை காற்றில் கலக்கும் துகள்களான சல்ப்யூரிக் டை ஆக்சைட் மற்றும் நைட் ராக்சைட் ஆகியவற்றின் அளவு கணக்கிடப்பட்டது. இதற்காக வடிவமைக்கப்பட்ட பில்டர் பேப்பரில் 8 மணி நேரத்துக்கு ஒருமுறை காற்றில் ஏற்படும் மாசு அளவு கணக்கெடுக்கப்பட்டது.மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் துணை முதன்மை அறிவியல் அலுவலர் சக்திவேல் தலைமையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். 24 மணி நேரத்துக்கு பதியப்பட்ட விவரங்கள், இன்று (14ம் தேதி) சென்னைக்கு அனுப்பப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...