அண்ணாமலைப் பல்கலை பிரச்னைக்கு தீர்வு காண கோரி அனைத்துக் கட்சி சார்பில் உண்ணாவிரத முடிவு

அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டு ஆசிரியர், ஊழியர்களை பாதிக்கும் ஆள்குறைப்பு மற்றும் ஊதியக்குறைப்பு நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் அனைத்து கட்சிகள், அனைத்து கூட்டமைப்புகள், அனைத்து சங்கங்கள், வணிக பெருமக்கள் ஆகியோர் இணைந்து நவ.15-ம் தேதி சிதம்பரம் காந்திசிலை அருகே உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வது என ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலலைப் பல்கலைக்கழக ஊழியர் சங்க அலுவலகத்தில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊழியர் சங்கத் தலைவர் சி.மதியழகன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ரவி. பேராசிரியர் உதயசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று பேசினார்.
அவர் பேசியது: சிதம்பரத்தில் பொதுபிரச்சனைகளுக்காக அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி பல நேரங்களில் போராடியுள்ளோம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடியை காராணம் காட்டி ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்க உள்ளதாகவும், ஊழியர்களுக்கும் ஊதியம் குறைக்கப்பட போவதாகவும் தகவல்கள் வெளியாகிவுள்ளது. எக்காரணம் கொண்டும் ஆள்குறைப்போ, ஊதிய குறைப்போ செய்யக்கூடாது. இவற்றை செய்தால் ஒட்டு மொத்த சிதம்பரம் மக்களின் வாழ்வாதாரமே பாதிக்கும். ஆகையால் ஆசிரியர்கள், ஊழியர்களுடன் இணைந்து அனைவரும் போராட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
கூட்டத்தில் திமுக நகர அவைத் தலைவர் தென்னவன் கே.ஆறுமுகம், மாவட்ட பிரிதிநிதிகள் ராஜேந்திரன், நகரமன்ற உறுப்பினர் வெங்கடேசன், பேரூராட்சி செயலாளர் முத்துக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மூசா, நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், பேரூராட்சி செயலாளர் ராஜா, இந்திய கம்யூ கட்சி நகரச் செயலாளர் சேகர், பாமக நிர்வாகி பேராசிரியர் திருநாவுக்கரசு, மாவட்ட கவுன்சிலர் கருணா, நகரச் செயலாளர் முத்து.குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு, மனித உரிமை அமைப்பு லோக.நடேசன், மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கே.வி.மோகனசுந்தரம், தேமுதிக மாவட்டச் செயலாளர் சபா.சசிக்குமார், அண்ணாமலைநகர் பேரூராட்சி செயலர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்: அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டுள்ள ஆசிரியர் மற்றும் ஊழியர்களை பாதிக்கும் ஆள்குறைப்பு மற்றும் ஊதியக்குறைப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும், பல்கலைக்கழக பிரச்சனை குறித்து தமிழகஅரசு தலையிட்டு சமூகநிலை ஏற்பட்ட உடன் வழிவகை செய்ய வேண்டும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...