அழித்த பைல்களை மீட்டுப் பெறுவதில் சந்தேகங்கள்

பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், நாம் அழித்த பைல்களை எளிதாக மீட்டுப் பெற்று விடலாம் என்று அனைவரும் எண்ணுகிறோம். ஒரு சிலர், அனைத்தையும் பெற முடியாது என்று கூறுகின்றனர். ஆனால், அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் ஒத்துக் கொள்வதாய் இல்லை. இது குறித்து நிலவும் சந்தேகங்களையும், அவை சரியானவை தானா என்பதனையும் இங்கு காணலாம்.
1. அழித்த பைல் அனைத்தையும் ரீசைக்கிள் பின் கொள்ளும்:





விண்டோஸ் இயக்கத்தில், ரீசைக்கிள் பின் என்னும் மீட்புத் தொட்டி, நமக்கு உதவிடும் நண்பனாக இருக்கிறது. நாம் அழித்த பைல்களைத் தாங்கிக் கொண்டு, மீண்டும் அவற்றை மீட்டு எடுக்க உதவுகிறது. அழித்த பைல் எல்லாம் இதில் சென்று தங்குமா? என்ற கேள்விக்கு ஆம் என்று பதில் கூற இயலாது. அனைத்து பைல் வகைகளையும் ரீ சைக்கிள் பின் கொள்ளாது. நீங்கள் மிகப் பெரிய பைல் அல்லது போல்டரை அழிக்க முற்படுகையில், இதனை ரீ சைக்கிள் பின் கொள்ளாது என்ற செய்தி உங்களுக்குக் காட்டப்படும். மிகப் பெரிய பைல் என்றால், நிச்சயம் அது அழிக்கப்பட்டால், ரீ சைக்கிள் பின்னுக்குச் செல்லாது. அதே போல, கமாண்ட் லைனிலிருந்து அழிக்கப்படும் பைல்கள் ரீ சைக்கிள் பின்னுக்குச் செல்லாது. ரிமோட் கண்ட்ரோல் மூலம் அழிக்கப்படும் பைல்களும் இங்கு செல்லாது.



2. அப்ளிகேஷன்கள் பைல்களை அழிக்கும் முன் கேட்காது:





அப்ளிகேஷன் புரோகிராம்கள் அப்டேட் செய்கையில், பழைய பைல்களை மேம்படுத்திக் கொள்ளும். இவற்றை மேம்படுத்துவதனால், பழைய பைல் அழிக்கப்படுகிறது, அழிக்கவா? என்றெல்லாம் நம்மிடம் ஆப்ஷன் கேட்காது. இவ்வாறு அழிக்கப்படும் பைல்களுக்கும் ரீ சைக்கிள் பின் அடைக்கலம் கொடுக்காது.
3. பேக் அப் செயல்முறை அழிக்கும் பழைய பைல்கள்:





அவ்வப்போது நம் பைல்களை பேக் அப் எடுப்பது ஒரு நல்ல பழக்கம். போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ், பிளாஷ் ட்ரைவ், சிடிக்கள் மற்றும் மேக்னடிக் டேப் ஆகியவற்றில் பேக் அப் எடுக்கலாம். இவ்வாறு எடுக்கையில், பழைய பைல்களின் இடத்தில், அப்டேட் செய்யப்பட்ட பைல்கள் இடம் பிடிக்கின்றன. பழைய பைல்கள் எங்கே செல்கின்றன? முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன. நாம் விரும்பினாலும் அவை மீளக் கிடைக்காது. ரீ சைக்கிள் பின் இந்த வகையில் நமக்கு உதவாது.
4. ஆபீஸ் பைல்கள் மேம்படுத்தப்பட்டால், பழைய பார்மட்டில் மீண்டும் கிடைக்காது:


மைக்ரோசாப்ட் வழங்கும் ஆபீஸ் தொகுப்பு மிக அருமையான வசதிகளைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். இது அடிக்கடி மேம்படுத்தப்பட்டு நமக்குக் கிடைத்து வருகிறது. இதனால், பழைய பதிப்புகளில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்கள், புதிய பதிப்புகளில் படிக்கப்படுகையில், புதிய பார்மட்டிற்கு மாற்றப்படும். எடுத்துக் காட்டாக, ஒருவர் ஆபீஸ் 2007 தொகுப்பில், டாகுமெண்ட் ஒன்றை தயாரித்து தன் நண்பர் ஒருவருக்குக் கொடுக்கிறார். அவர் அதனைத் தன் கம்ப்யூட்டரில் ஆபீஸ் 2010 தொகுப்பில் படிக்கிறார். டாகுமெண்ட் அந்த பார்மட்டுக்கு மாறுகிறது. டாகுமெண்ட்டில் மாற்றங்களை ஏற்படுத்தி, நண்பருக்கே திருப்பி அனுப்புகிறார். அவரால், அதனை தன் ஆபீஸ் 2007 தொகுப்பில் படிக்க இயலாது. அவரிடம், அவரின் பழைய பார்மட் டாகுமெண்ட் இல்லை என்றால், அவர் டாகுமெண்ட் பைல், அழிந்ததுதான். மீண்டும் கிடைக்காது. பார்மட்டினை ஆபீஸ் 2010 மாற்றுகையில், பழைய பார்மட் கொண்ட டாகுமெண்ட் பைல், ரீ சைக்கிள் பின்னுக்குச் செல்லாது.
5. டேட்டா ரெகவரி புரோகிராம் உதவுமா?





அழிக்கப்பட்ட பைல்களில் உள்ள டேட்டாவினை மீட்டுத் தரும் பல புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவை எந்த அளவிற்கு அழித்த பைல்களை மீட்டுத் தரும்? எந்த சூழ்நிலையில் இவை இயங்கி மீட்டுத் தரும்? என்பது கேள்விக் குறியே. பெரும்பாலான நேரங்களில், இவை முழு வெற்றியைத் தருவதில்லை. முழுமையாக மீட்டுத் தருவதில்லை.

6. பைல் அழிந்தால் அவ்வளவுதான்!:



ஒரு பைல் அழிக்கப்பட்டால், அவற்றில் உள்ள டேட்டா, அங்கேயே தங்குகிறது. முதல்
நிலையில் எது அழிக்கப்படுகிறது என்றால், அந்த டேட்டா தங்கியிருக்கும் இடம் குறித்த தகவல் தான். அந்த இடத்தில் இனி புதிய டேட்டாவினை எழுதிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப் படுகிறது. எனவே, அந்த இடத்தில் புதிய டேட்டா எழுதப்படும் வரையில், டேட்டா தங்கும். அந்நிலையில் அவற்றை மீட்கலாம். ஆனால், அந்த டேட்டா தங்கும் பிரிவுகள் ஏதேனும் சிலவற்றில் கூட புதிய டேட்டா எழுதப்பட்டால், பழைய பைல் நமக்குக் கோர்வையாகக் கிடைக்குமா என்பது சந்தேகமே.
இது போன்ற அமைப்பும் நமக்கு தீங்கு விளைவிக்கலாம். ஏனென்றால், அழிக்கப்பட்ட டேட்டாவினை, நமக்கு வேண்டாதவர் கைப்பற்ற முடியும். டேட்டா அடுத்தவர் அறியக் கூடாத வகை எனில், நமக்குத் தொல்லை தான். மேலே சுட்டிக் காட்டப்பட்டவை சில நிகழ்வுகளே. ரீ சைக்கிள் பின் மற்றும் பேக் அப் போன்ற வசதிகள் எந்த அளவிற்கு நமக்கு பைல்களை மீட்க உதவுகின்றன என்று பார்த்தோம். இப்போது சில அப்ளிகேஷன் புரோகிராம்கள், பைல்கள் எந்த சூழ்நிலையில் எப்போது அழிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை மீட்டுத் தரும் என்று விளம்பரப்படுத்தப்படுகின்றன. இவற்றின் செயல் தன்மையைக் கண்ட பின்பே, இவை கூறும் சாத்தியக் கூறுகள் சரிதானா என்று அறியலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...