உச்சநீதிமன்றத்தில் நமது தொடர் முயற்சிகளின் காரணமாக இந்த மாதம் இறுதியில் வழக்கு விசாரணைக்கு வருகிறது.!!!!

.இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுக்கு  செயலாளரின் கனிவான வணக்கம்.
நம் இயக்கம் ஆரம்பித்ததற்குப்பின்னர் இரண்டரை ஆண்டுகளாக கேட்ர்ப்பாரற்றுக்கிடந்த நம்முடைய வழக்கை தூசுதட்டி நம்முடைய வழக்கிற்க்குள்  நுழைந்தோம் .நுழைந்தது
முதல் ஒரு வழக்கு விசாரணையும்,நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் இருந்த சர்வீஸ் ப்ளீடிங் எனப்படும் வழக்கின் உண்மை நகல்களை ஒப்படைக்காமல் இருந்தவர்களை ஒப்படைக்கச் செய்துள்ளோம்.மேலும்  வழக்கை   விரைந்து நடத்தி முடிப்பதற்கு உரிய தகுதியை ஏற்படுத்தி   உள்ளோம்.நமது அதிக அழுத்தத்தின் காரணமாக நமது வழக்கறிஞர் மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிஅரசர்களிடம் வலியுறித்தி கேட்டுக்கொண்டதின் பேரில் நவம்பர் முதல் வாரத்தில் வழக்கு விசாரணை கொண்டுவாருங்கள் என்று கூறினர். நாமும் அவ்வாறே செய்தோம்.ஆனால் அதிக வேலைப்பளு காரணமாக நவம்பர் கடைசி வாரத்தில்தான் கொண்டுவரமுடியும் என்று பதிவாளர் கூறிவிட்டார்.நாமும் நமது வழக்கறிஞகருக்கு அதிகப்பணம் கொடுக்க முடிய வில்லை.இரண்டு வழக்கிற்கும் சேர்த்தே ரூபாய்  40000 மட்டுமே கொடுத்துள்ளோம். தற்போதைய வழக்கு விசாரணைக்கு வரும்போது இன்னும்  ரூபாய் 40000 தரவேண்டும் என்று வலியுறித்தி உள்ளார்.இவ்வளவு குறைந்த செலவில் வேறு எந்த ஒருவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.நம்முடைய முழு பொருளாதார நிலையையும் நன்கு உணர்ந்தவர்.நமத வரவு செலவு கணக்குகள் முழுவதையும் மாவட்ட தலைவர்களுக்கு அனுப்பிஉள்ளேன்.பண இருப்பு விவரங்களை அறிய  மாவட்ட தலைவர்களை தொடர்புகொள்ளுங்கள் அல்லது என்னை தொடர்புகொள்ளுங்கள்.மேலும் , வழக்கை விரைவாக முடித்துக்கொடுங்கள் என்று நம்முடைய இயக்கத்தின் உறுப்பினர்கள் தினமும் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார்கள்.அவர்களை விட எடுத்த காரியத்தில் மிக மிக  விரைவாக முடித்துதரவேண்டும் என்ற ஆவல் மிக அதிகமாகவே இயக்கத்திற்கு  உள்ளது.ஆனால்,குறைந்த பொருளாதார செலவில் இதைவிட விரைவாக முடிக்க முடியாது.நமது வழக்கறிஞரும் மூன்றே மாதங்களில் கூட வழக்கை  முடிக்க வாய்ப்புள்ளது.ஆனால் அவ்வளவு பொருளாதார செலவு நம்மால் செய்யமுடியாது.ஆகவே தயவு கூர்ந்து ஆசிரியப்பெருமக்கள் நிலையை புரிந்து கொண்டு இயக்கம் எடுக்கும் அடுத்த கட்ட தீவிர நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பை தாருங்கள்.உறுதியாக நாம் எடுத்த இரண்டு காரியங்களையும் செய்து முடிக்காமல்,ஓயமாட்டோம்.!!!!!!!!!! தயவு கூர்ந்து, யாராவது ஒருவர் போராடுவார்கள் , நாம் வெளியில் நின்று வேடிக்கை பார்ப்போம் என்று பார்த்தீர்களானால் ,உங்கள் வாழ்க்கை  மற்றவர்களுக்கு  வேடிக்கை ஆகிவிடும்.ஆதலால் உங்களது  முழு  ஒத்துழைப்பையும்  தாருங்கள் இறுதி வெற்றி நமதே!!!!!!!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...