"டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்' பணிக்கு பதிவு மூப்பு விபரம் வெளியிட்டுள்ளதாக,'' வேலைவாய்ப்பு அலுவலர் தொண்டீஸ்வரன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது; இப்பணிக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி. தமிழ், ஆங்கிலம் "டைப்பிங்' உயர்நிலை பெற்றிருத்தல் அல்லது தமிழ், ஆங்கிலத்தில், உயர், கீழ்நிலை பெற்றிருத்தல் வேண்டும். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் பட்டயம் அவசியம். வயது 1.7.2012 அன்று
தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் 35; பிற்பட்ட, மிக பிற்பட்டோர் 32; போட்டியினர் 30க்குள். முன்னுரிமை உள்ளோர் அனைத்து வகுப்பு ஆதரவற்ற விதவை 3.7.2006; பிற்பட்டோர் (முஸ்லிம் தவிர) 29.7.99; மிக பிற்பட்டோர் 25.6.2003; பகிரங்க போட்டியினர் 9.1.2002. முன்னுரிமை இல்லாதவர்கள் தாழ்த்தப்பட்டோர் 12.10.2004; பிற்பட்டோர் (முஸ்லிம் தவிர) 19.8.94; பகிரங்கபோட்டியினர் 30.6.99. இத்தகுதியுள்ளவர்கள் கல்வி, வயது சான்று, பதிவு மூப்பு விபரங்களுடன் நவ.,26 அன்று காலை 11 மணிக்கு, வேலைவாய்ப்பு அலுவலகம் வரவும், என்றார்.