வி.ஏ.ஓ. தேர்வு முடிவு: இம்மாத இறுதிக்குள் வெளியீடு: ஆர்.நடராஜ் தகவல்

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வு முடிவு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் ஆர்.நடராஜ் கூறினார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக மேலாண்மையியல் துறை தொடர்பான நிகழ்ச்சியில் வியாழக்கிழமை பங்கேற்ற பிறகு,
செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இதைத் தெரிவித்தார். மொத்தம் 1,870 வி.ஏ.ஓ. காலிப்பணியிடங்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் பேர் எழுதினர்.
டிசம்பர் 15ஆம் தேதிக்குள் குரூப் 2 தேர்வு முடிவு: அதேபோல், குரூப் 2 மறுதேர்வு முடிவுகள் வரும் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
குரூப் 2 வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதைத் தொடர்ந்து மறுதேர்வு நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இந்தத் தேர்வை சுமார் 4 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.
நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அதிகாரி, உதவி வணிகவரி அதிகாரி உள்ளிட்ட 3,687 பணியிடங்களுக்காக ஆகஸ்ட் மாதத்தில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வில் வினாத்தாள் வெளியானதைத் தொடர்ந்து நவம்பரில் மறுதேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...