புல முதல்வர்களுக்கு ஊதியம் குறைப்புஅண்ணாமலை பல்கலை பதிவாளர் சுற்றறிக்கை

:நிதி நெருக்கடி காரணமாக, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வரும் மாதங்களில் சரிவர ஊதியம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக, அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் மீனாட்சிசுந்தரம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நிதி நெருக்கடி காரணமாக ஆசிரியர்கள், ஊழியர்கள் சங்கத் தலைவர்களை இம்மாதம் 7ம் தேதி பேச்சு வார்த்தைக்கு
அழைத்தனர். பல்கலைக் கழக ஊழியர்கள் இடையே போராட்டம் வெடித்தது. இதனால் பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது. அனைத்துத் துறை புல முதல்வர்கள், அனைத்துத்துறை தலைவர்கள். இயக்குநர், தொலைதூரக்கல்வி இயக்ககம் உள்ளிட்ட, அனைத்து அதிகாரிகளுக்கு பதிவாளர் மீனாட்சிசுந்தரம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.சுற்றறிக்கை விவரம்:பல்கலைக் கழகத்தில் 2,500 ஆசிரியர்கள், 10 ஆயிரம் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழக அரசு, 657 ஆசிரியர்களுக்கும், 1,110 ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு மட்டுமே ஊதிய நிதி உதவி வழங்குகிறது. அதிலும், நிதி தணிக்கை துறையினரால் தணிக்கை தடை உள்ளவர்களின் நிதி உதவி குறைக்கப்படுகிறது.

தமிழக அரசு ஆண்டிற்கு 61 கோடி ரூபாய் மட்டும் பல்கலைக் கழகத்திற்கு நிதி உதவி ஒதுக்கீடு செய்கிறது. அதுவும், அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் முழுமையாக வழங்கவில்லை.
ஏனைய பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் பிற ஊழியர்களுக்கான ஊதியம், பல்கலை நிதி மற்றும் தொலைதூர கல்வி இயக்கக வருவாயில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.நீண்ட காலமாக கலை மற்றும் அறிவியல் புலத்தில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருவதால் ஊழியர்களின் மாத ஊதியத்திற்கான தொகையை கல்விக் கட்டணம் மற்றும் இதர கட்டணம் வாயிலாக மாணவர்களிடமிருந்து பெறமுடியவில்லை.நிதி சிக்கல் காரணமாக, வரும் மாதங்களில் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு சரிவர ஊதியம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு 6வது ஊதியக்குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்தியதன் விளைவாக சம்பள உயர்வு, 35 சதவீதமும், பஞ்சப்படி, 23 சதவீதத்தில் இருந்து, 72 சதவீதமாக உயர்ந்துள்ளது.ஊழியர்களின் ஊதியம் உயர்ந்த நிலைக்கு ஏற்ப பல்கலைக்கு வருவாய் அதிகரிக்கவில்லை. தற்போதைய நிதி நெருக்கடி மற்றும் அவசர தேவைக்கு தீர்வு காண, நிர்வாக செயல்பாடு மற்றும் நிதி நிலையை மறு சீரமைப்பு செய்வது அவசியமாகிறது. இதற்கு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஒத்தழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு பதிவாளர் மீனாட்சி சுந்தரம் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...