புதிய விதிமுறை பின்பற்றாத பள்ளி வாகன உரிமம் ரத்து


சேலையூரில் கடந்த ஜூலை மாதம் 2,ம் வகுப்பு மாணவி ஸ்ருதி பள்ளி பஸ்சில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து இறந்தார்.சென்னை உயர்நீதிமன்றம் தானே முன்வந்து இச்சம்பவத்தை பொதுநலன் வழக்காக விசாரணைக்கு எடுத்து கொண்டது. இதனைத் தொடர்ந்து பள்ளி வாகனங்களுக்கு 6 பேர் கொண்ட குழு
மூலம் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டது. புதிய அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் 21 விதிமுறைகளை அக்டோபர் 1ம் தேதி முதல் பின்பற்ற பள்ளி வாகனங்களுக்கு அரசு உத்தரவிட்டு இருந்தது.

விதியில் குறிப்பாக பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு அம்சங்கள் இருத்தல், ஓட்டுனர்கள் குறைந்த பட்சம் 5 வருடம் முன்அனுபவம் இருக்க வேண்டும், மாதந்தோறும் பள்ளி நிர்வாகங்கள், பெற்றோர் சங்கங்களுடன் இணைந்து கூட்டம் நடத்த வேண்டும். அந்த கூட்டத்தில் நடத்தப் படும் அறிக்கையை பள்ளி குழுக்கள் மூலம் போக்குவரத்து துறைக்கு அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இது குறித்து போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ''பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அரசு 21 விதிமுறைகளை பின்பற்ற கடந்த அக்டோபர் 1ம் தேதி உத்தரவிட்டு இருந்தது. அதில் முக்கியமாக ஒவ்வொரு பள்ளிகளிலும் பெற்றோர், ஆசிரியர்கள் புதிய சங்கம் அமைக்க வேண்டும். இந்த சங்கம் மூலம் மாதந்தோறும் கூட்டம் நடத்த வேண்டும். கூட்டம் நடத்தி அதில் எடுக்கப்படும் முக்கிய தீர்மானங்களை பள்ளி அளவிலான போக்குவரத்து குழுவுக்கு அளிக்க வேண்டும்.

இந்த குழு அறிக்கையை மாதந்தோறும் அரசுக்கு அனுப்ப வேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் பெற்றோர் சங்கங்களுடன் இணைந்து கூட்டம் நடத்தப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்படி தொடர்ந்து செயல்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளி வாகனங்கள் உரிமம் மீது சஸ்பெண்ட் அல்லது ரத்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி இயக்ககத்திற்கு வலியுறுத்தப்படும்'' என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...