பள்ளியில் அறிவியல் கண்காட்சி


பளளிக் கல்வித் துறையின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி-2012 தொடக்க விழா செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி மற்றும் செயின்ட் மேரீஸ் பள்ளிகளில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 முதன்மை கல்வி அலுவலர் செ.சாந்தி வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் சித்ரசேனன் தலைமை தாங்கி பேசுகையில், தற்போது காஞ்சிபுரம்

மாவட்டம் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 22-வது இடத்திலும், பிளஸ் 2 தேர்ச்சியில் 11-வது இடத்திலும் உள்ளது. கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் முயற்சி எடுத்து இந்த ஆண்டு முதன்மை இடத்தை பிடிக்கப் பாடுபட வேண்டும் என்றார்.
 சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக் கொண்ட கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து, தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
 ÷பின்னர் அவர் பேசுகையில், மாணவர்களின் படிப்பிற்காக முதல்வர் பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்பட்டு வருகிறார். தற்போது கல்விக்காக மட்டும் ரூ.15 கோடி ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
 மாவட்ட ஊராட்சி தலைவர் காஞ்சிபன்னீர் செல்வம், எம்எல்ஏ-க்கள் எஸ்.கணிதா சம்பத், பா.கணேசன், பா.தன்சிங், மறைமலை நகர் நகர்மன்றத் தலைவர் கோபிகண்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அமுதவல்லி, மாவட்டக் கல்வி அலுவலர் டி.சீதாலட்சுமி, செங்கல்பட்டு தொடக்க கல்வி அலுவலர் டி.சந்திரா, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் எஸ்.சுந்தராராஜன், களியமாம்பூண்டி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் எஸ்.ஜெயராமன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
 ÷செங்கல்பட்டு மாவட்டக் கல்வி அலுவலர் பி.சகுந்தலா நன்றி கூறினார். கண்காட்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது.
 விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டி ஒருங்கிணைப்பாளர்களுமான ராதாகிருஷ்ணன், ஜெயகுமார், டி. சுப்ரமணியன், ராஜி, ஆராமுதன், கருணாநிதி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...