மாணவர்கள் போராட்டம் வாபஸ்: எம்.பி.பி.எஸ். தேர்வு முடிவு திருத்தப்படும்: அமைச்சர் உறுதி

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வு முடிவு மீண்டும் வெளியிடப்படும் என்று தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவிடம் உத்தரவு பெற்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் மூலம் திருத்தப்பட்ட தேர்வு முடிவு மீண்டும் விரைவில் வெளியிடப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் சனிக்கிழமை உறுதி அளித்தார்.
திடீர் போராட்டம்: எம்.பி.பி.எஸ். படிப்பில்
கடந்த ஆண்டு சேர்ந்த 3,565 மாணவர்கள், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் ஆண்டு தேர்வை எழுதினர்.
எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வு முடிவை கடந்த
அக்டோபர் 26-ம் தேதி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் வெளியிட்டது.
"அனாடமி', "ஃபிஸியாலஜி', "பயோகெமிஸ்ட்ரி', வாய்மொழித் தேர்வு ஆகிய ஒவ்வொன்றிலும் 50 சதவீத மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி என்ற புதிய விதிமுறையின்படி கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
இதனால் 2,158 மாணவர்கள் மட்டுமே தேர்வில் தேர்ச்சி அடைந்து எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. தேர்ச்சி பெறாத 1,405 மாணவர்கள், "பிரேக் சிஸ்டம்' முறைப்படி மீண்டும் முதலாம் ஆண்டில் படிக்கும் நிலை ஏற்பட்டது. அனைத்துப் பாடங்களிலும் ஒட்டுமொத்தமாக 50 சதவீத மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி என்ற எம்.சி.ஐ. விதிமுறையைப் பின்பற்றாமல் தேர்வு முடிவை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையிலும் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த ஆண்டும் இதே போன்று எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வு முடிவு வெளியாகி பிரச்னை ஏற்பட்டு, மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். கடந்த ஆண்டும் இரண்டு முறை எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வு முடிவு திருத்தப்பட்டு இறுதியில் 81 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
கடந்த ஆண்டு மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்துள்ள உத்தரவை பொருட்படுத்தாமல், தேர்வு முடிவை அண்மையில் வெளியிட்டதற்கு பல்கலைக்கழக பதிவாளர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தலைமை நீதிபதி இக்பால் உத்தரவிட்டார். அதன்படி பதிவாளர் மன்னிப்பு கேட்டார். தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவர்களிடம் அமைச்சர் டாக்டர் வி.எஸ். விஜய் உறுதி அளித்தபடி, எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வு முடிவை மீண்டும் வெளியிடுவது குறித்து நீதிமன்றத்தில் எந்தவித கருத்தையும் அரசு தெரிவிக்காமல் இருந்ததால், தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் சனிக்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே 50 மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்; அதே சமயம் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சுமார் 700 மாணவர்கள் திடீர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைச்சர் விஜய் சமரசம்: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மருந்தாக்கியல் வார விழாவில் கலந்து கொள்ள டாக்டர் வி.எஸ். விஜய் வந்தார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பிரதிநிதிகளிடமும் பின்னர் மாணவர்களிடமும் எம்.சி.ஐ. விதிகளின்படி எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வு முடிவு மீண்டும் விரைவில் வெளியிடப்படும் என்று உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக தமிழ்நாடு மருத்துவ மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ம.காமராஜ் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...