சிலம்பப் போட்டி சாத்தான்குளம் பள்ளி சிறப்பிடம்


தூத்துக்குடி மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் சாத்தான்குளம் பள்ளி மாணவர், மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
 மாவட்ட அளவிலான சிலம்பாட்ட பள்ளி மாணவர், மாணவிகளுக்கான போட்டிகள் தூத்துக்குடியில்
நடைபெற்றன. இந்தப் போட்டிகளை மாவட்ட சிலம்பாட்ட கழகச் செயலர் ஐயப்பன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில், மாவட்டத்திலிருந்து பல பள்ளி மாணவர், மாணவிகள் பங்கேற்றனர். வயது மற்றும் எடைப் பிரிவு என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
 இப்போட்டியில், சாத்தான்குளம் கோல்டு ஸ்டார் சிலம்பாட்ட பள்ளி மாணவர், மாணவிகள் 13 பேர் வெற்றி பெற்று பரிசுகளை பெற்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...