சீசரின் வெற்றி ரகசியம்!-SSTA ADDITIONAL

வித்தியாசமான முயற்சிகள் வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதை வரலாற்று அறிஞர்கள் அறிந்திருந்தனர் அவர்களில் ஒருவர் தான் ஜுலியஸ் சீசர். ரோமானியப் பேரரசனான சீசர் தொடர்ந்து பல நாடுகளின் மேல் படையெடுத்து வெற்றி பெற்று வந்தார்.
அடுத்தபடியாக அவர் இங்கிலாந்தில் போர் தொடுக்க விரும்பி தனது படைகளைத் திரட்டிச் சென்றார். ஆனால் தொடர்ந்து பல வெற்றிகளை ருசித்ததாலும், இதுவரை தோல்வியை கண்டிராததாலும் படை வீரர்களிடம் தொடர்ந்து போரிடும் ஆர்வம் இல்லாமல் இருந்தது. இதனை அறிந்த சீசர் படை வீரர்களிடம் தொடர்ந்து
போரிடும் ஆர்வம் இல்லாமல் இருந்தது. இதனை அறிந்த சீசர் படை வீரர்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் தர ஏற்பாடு செய்தார்.
அதன்படி இங்கிலாந்தை அடைந்த உடன் படைவீரர்களுக்குத் தெரியாமல் தாங்கள் வந்த கப்பல்களை முழுவதும் எரித்து சாம்பலாக்கினார். தகவல் அறிந்து அதிர்ச்சி அமைந்த படை வீரர்களிடம் சீசர், வீரர்களே இங்கிலாந்துடன் நீங்கள் போரிட விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் நாம் இங்கிலாந்தை வீழ்த்தினால் தான் ரோமானிய நாட்டிற்கு திரும்ப முடியும். தப்பிச் செல்ல நினைத்தால் கூட திரும்பி செல்ல கப்பல்கள் கிடையாது. அதனால் வாழ்வா, சாவா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்றார்.
இதனால் சூழ்நிலையை உணர்ந்த படை வீரர்கள் ஆக்ரோசமாக போரிட்டு இங்கிலாந்தை வீழ்த்தி அவர்களின் கப்பல்களைப் பறித்துக்கொண்டு ரோமானியா திரும்பினர். எனவே நாம் எந்த செயலை செய்தாலும் முயற்சியுடன் போராடினால் கண்டிப்பாக வெற்றி பெறலாம் இது ஜீலியஸ் சீசரின் வெற்றி ரகசியமாகும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...