சென்னை பல்கலை தொலைதூர கல்வி இளநிலை தேர்வுகள் 13ல் துவக்கம்

சென்னை பல்கலைக்கழக, இளங்கலை தொலைதூர படிப்பிற்கான தேர்வுகள், வரும் 13ம் தேதி துவங்குகிறது. சென்னை பல்கலை, தொலைதூர கல்வி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும், பி.ஏ., - பி.காம்., - பி.பி.ஏ., - பி.சி.ஏ., உள்ளிட இளங்கலை
படிப்புகளுக்கான தேர்வுகள், வரும் 13ம் தேதி துவங்கி, ஜனவரி 5ம் தேதி வரை நடக்கிறது. வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், இளங்கலை தேர்வுகள் நடக்க உள்ளன. தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, தேர்வு அட்டணையும், தேர்வு நடைபெறும் மையங்கள் குறித்த முழு தகவல்களும், தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை, தேர்வு நடைபெறுவதற்கு மூன்று நாள்களுக்கு முன், தேர்வு மையத்தில் பெற்று கொள்ளலாம். சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவன இணையதளமான, www.ideunom.ac.in என்ற முகவரியிலிருந்தும், ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...