1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்


விஏஓ பதவிக்கு 1870 பேரை தேர்வு செய்வதற்கான கவுன்சலிங் இம்மாத இறுதியில் தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி தலை வர் நட்ராஜ் கூறினார்.
தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையத் தால் 2007,2008, 2012, 2013ம் ஆண்டுக்கான குரூப் 4ல் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர்,

சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை,3 பணி களுக்கான தேர்வு முடிவு கடந்த அக்டோபர் 8ம் தேதி வெளியிடப்பட்டது.

இத்தேர்வில் தட்டச்சர் பதவிக்கு தேர்வு செய்யப் பட்டோருக்கான சான் றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முடிந்து அண் மையில் பணி நியமன ஆணை வழங்கப் பட் டது. இந்நிலை யில், இளநிலை உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டோருக் கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறை யிலான துறை ஒதுக்கீடு சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத் தில் நேற்று தொடங்கியது. காலி பணியிடங்கள் குறித்த விவரம் அவ்வப் போது, மெகா திரை யில் தேர்வாளர் களுக்கு காண் பிக்கப் பட்டது.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சலிங்கை பார்வையிட்ட பின்னர், டிஎன் பிஎஸ்சி தலைவர் நட்ராஜ் அளித்த பேட்டி: இளநிலை உதவி யாளருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன் சலிங் 10 நாள் நடைபெறும். தினமும் காலையில் 300 பேர், பிற்பகலில் 300 பேர் என 600 பேர் கவுன்சலிங் குக்கு அழைக்கப்பட்டுள்ள னர். ரேங்க் அடிப்படையில் தேர்வானவர்களுக்கு 185 துறையில் பணி ஒதுக்கப்படும்.

 விஏஓவில் 1,870 பணி யிடத்துக்கு நடத் தப்பட்ட தேர்வுக்கான ரிசல்ட் நவம்பர் 30ம் தேதி வெளி யிடப்பட்டது. இதற்கான கவுன்சலிங் இம்மாத இறுதியில் நடைபெறும். அதை தொடர்ந்து, அண்மையில் நடந்து முடிந்த குருப் 1, குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும். 2013ல் டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் ஒரு ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை ஜனவரியில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...