நந்தனத்தில் நடந்த நிகழ்ச்சியில் 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் ஜெயலலிதா


ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை மற்றும் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் இன்று காலை நடந்தது. விழாவுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி முன்னிலை வகித்தார். தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கிவரவேற்றார். விழாவில்,
முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு 20,920 பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமன ஆணை, 92 லட்சம் மாணவ - மாணவிகளுக்கு புத்தகப்பை, வண்ணசீருடை மற்றும் கிரையான்கள், பென்சில், கணித உபகரணப்பெட்டி, புவி யியல் வரைபட புத்தகம், காலணி, இலவச சைக்கிள், பஸ்பாஸ் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

மேலும், குடும்பத்தில் தலைவரை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவியையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். முடிவில், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் சபீதா நன்றி கூறினார். விழாவில், பணி நியமன ஆணை பெற்ற ஆசிரியர்கள் நேற்று இரவே பஸ்களில் சென்னை அழைத்து வரப்பட்டனர். பள்ளிகள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். காலையில் விழா நடைபெறும் மேடைக்கு அழைத்து செல்லப்பட்டனர்..

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...