டிச.23 ல்தேசிய இளநிலை ஆராய்ச்சியாளர்கள் தேர்வு

சி.எஸ்.ஐ. ஆர்,யு.ஜி.சி., சார்பில், இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தகுதி தேர்வு, காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகம், அழகப்பா இன்ஜி., கல்லூரி, பாலிடெக்னிக் உட்பட 13 மையங்களில் டிச., 23 ல் நடக்கிறது. தென் மாவட்டங்களை சேர்ந்த
எம்.எஸ்.சி., இன்ஜினியரிங் படித்த, 5012 பேர் இதில் பங்கேற்கின்றனர்.
காலை 9 முதல் பகல் 12 மணி வரை இயற்பியல், உயிரியல், புவி, வானவியல், கடல் மற்றும் கோளவியல் சார்ந்த அறிவியல் பாடங்களுக்கும், மதியம் 2 முதல் மாலை 5 மணி வரை வேதியியல், பொறியியல், கணிதவியல் பாடங்களுக்கும் தேர்வு நடக்கும். அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் டில்லியிலிருந்து ஏற்கனவே நுழைவு சீட்டு அனுப்பப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெறாதவர்கள் www.csirhrdg.res.in இணையதளத்தில், வரிசை எண், ஆவணங்களை சரிபார்த்து, இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், உரிய ஆவணங்களுடன் வந்து, டிச., 22 காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை, காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தில், தேர்வுக்கான நகல் நுழைவு சீட்டை பெறலாம்.
நுழைவு சீட்டு பெற்றவர்கள், அதில் புகைப்படம் சரியான முறையில் "ஸ்கேன்' ஆகாமல் இருந்தால், தேர்வு எழுத வரும்போது, இரண்டு ஸ்டாம்ப் சைஸ் புகைப்படங்களுடன் வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு என்.பழனிச்சாமி, தேர்வு ஒருங்கிணைப்பாளர், சிக்ரி, காரைக்குடி. போன், 04565 227 770, 241 400, மொபைல் 94438 50679, 94436 09776 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என சிக்ரி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...