3 ஆண்டுகளாகத் திறக்கப்படாத பள்ளிக் கட்டடம்

ரிஷிவந்தியம் அருகே கட்டி திறக்கப்படாமல் கடந்த 3 ஆண்டுகளாக பள்ளிக் கட்டடம் வீணாகி வருகிறது.
 ரிஷிவந்தியம் ஒன்றியம், நூரோலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 153 மாணவ, மாணவிகள்
கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் பணிபுரிந்து வருகின்றனர். 2 ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.
 இங்கு போதிய கட்டட வசதியின்றி மாணவர்கள் தவித்து வந்தனர். இதையடுத்து கடந்த 2008-09-ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 3 வகுப்பறைக் கட்டடம் மற்றும் சமையறைக் கூடம் புதிதாகக் கட்டப்பட்டது.
 பணிகள் அனைத்தும் முடிந்து கடந்த 3 ஆண்டுகளாக தயார் நிலையில் காணப்படும் இக்கட்டடத்தை திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
 இதனால் பழைய பள்ளிக் கட்டடத்தில் போதிய இடவசதியின்றி மாணவர்கள் மரத்தடியிலும், கட்டாந்தரையிலும் தற்போது கல்வி பயின்று வரும் நிலை உள்ளது. திறக்கப் படாமல் காட்சிப் பொருளாக மாறிப் போன வகுப்பறைக் கட்டடத்தை திறந்து, பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் கே.ஏ.வெங்கடேசனிடம் கேட்டபோது, கழிப்பறை அமைத்த பின்புதான் 3 வகுப்பறைக் கட்டடம் திறக்கப்படும் என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...