மாற்றுத் திறனாளி குழந்தைகள் நாடாளுமன்றம்: டிச.4ல் தில்லியில் நடைபெறுகிறது

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் பங்கு பெறும் குழந்தைகள் நாடாளுமன்றம் (நேஷனல் அசெம்ப்ளி) தில்லியில் டிசம்பர் 4-ம் தேதி நடைபெறுகிறது என்று வேர்ல்டு விஷன் இந்தியா என்று தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த குழந்தைகள் நாடாளுமன்றம்
தீன் மூர்த்தி மார்கில் (சாணக்கியாபுரி போலீஸ் ஸ்டேஷன் எதிரில்) உள்ள விஷ்வ யுவக் கேந்திராவில் நடைபெறுகிறது.
இதை குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் சாந்தா சின்ஹா தொடங்கி வைக்கிறார்.இதில் நாடெங்கும் உள்ள கிராமப்புற, நகர்ப்புறங்களிலிருந்து 150 மாற்றுத்திறனாளி குழந்தைகள் பங்கு பெறுகின்றனர். இதில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள், மருத்துவம், கல்வி பெறுவதில் உள்ள சிக்கல் குறித்து விவாதம் நடைபெறும்.
நாட்டில் 3 கோடிக்கு அதிகமான மாற்றுதிறனாளி குழந்தைகள் உள்ளனர் என்று யுனிசெஃப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பள்ளிச் செல்லும் 6 முதல் 14 வயதுடைய 20 கோடி குழந்தைகளில் 2 கோடிக்கு பேருக்கு சிறப்புக் கல்வி  அளிக்க வேண்டும் என்று என்.சி.இ.ஆர்.டி. 1998 நடத்திய ஆறாவது தேசிய கல்வி ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்று அந்த தொண்டு நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...