படிக்கட்டில் பயணம்: சென்னையில் ஒரே நாளில் 5,209 வழக்கு: அபராதம் மூலம் ரூ.5.20 லட்சம் வசூல்

சென்னையில் பஸ்ஸின் படிக்கட்டில் பயணம் செய்ததாக வியாழக்கிழமை ஒரே நாளில் 5,209 வழக்குப் பதிவு செய்து அவர்களிடம் தலா ரூ. 100 அபராதம் தொகையை போலீஸார் வசூல் செய்தனர்.
இதன் மூலம் பெருநகர காவல் துறையின்
போக்குவரத்துப் பிரிவுக்கு ரூ.5,20,900 கிடைத்துள்ளது.
சென்னை பெருங்குடி அருகே கடந்த திங்கள்கிழமை நேரிட்ட விபத்தில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாகவே முன் வந்து வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்குத் தொடர்பான விசாரணை உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது.   பஸ் படிக்கட்டுகளில் தொடர்ந்து பயணம் செய்யும் மாணவர்கள் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி அல்லது கல்லூரியின் முதல்வருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அத்தகைய மாணவர்களின் பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்பிய பின்னர், அந்த மாணவர்களை கல்வி நிலையங்களிலிருந்து நீக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்தது.
இதேபோல பல பரிந்துரைகளை நீதிமன்றம் காவல்துறைக்கும் அளித்தது. இதன் அடிப்படையில் போக்குவரத்துப் பிரிவு போலீஸôர் சென்னை முழுவதும் ஒரே நேரத்தில் வியாழக்கிழமை சோதனை செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர். பஸ்களில் படிக்கட்டில் தொங்கியப்படி பயணித்தவர்களைப் பிடித்து எச்சரித்தனர். அவர்களிடம் மோட்டார் வாகனச் சட்ட விதிமுறைகளை மீறியதாக ரூ. 100 அபராதம் வசூல் செய்தனர். இ-செலான் இயந்திரம் மூலம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ்காந்தி சாலை, பூந்தமல்லி சாலை, புறவழிச் சாலைகள், ஆற்காடு சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் இந்தச் சோதனை நடைபெற்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதேபோல பிற பகுதிகளில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்தோரை போலீஸார் கடுமையாக எச்சரித்தனர். அடுத்தக் கட்ட நடவடிக்கையாக படிக்கட்டில் தொடர்ந்து பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களின் தகவல்களை சேகரித்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கும், அவரது பெற்றோருக்கும் அனுப்பவும் திட்டமிட்டிருப்பதாக போக்குவரத்துப் பிரிவு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...