உயர் கல்வி சிறப்புச் செயலர் டேவிதார் மாற்றம்

உயர் கல்வித் துறை சிறப்புச் செயலராக இருந்த டேவிதார், தமிழ்நாடு கிடங்கு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கிடங்கு நிறுவனத்தின் தலைவர் பதவியில்
இருந்த ராஜேஷ் லக்கானி அண்மையில் எரிசக்தி துறையின் செயலராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
எரிசக்தி துறையின் செயலராக இருந்த ரமேஷ் குமார் கன்னா, தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத் தலைவர் மற்றும் முதன்மைச் செயலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவுகளை தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி பிறப்பித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...