"வளர்கல்வி மைய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்'

புதுவையில் வளர்கல்வி மைய ஊழியர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காரைக்காலில் வளர்கல்வி
இயக்கத்தில் 167 பொறுப்பாளர்களும், 18 தலைமை மையப் பொறுப்பாளர்களும் தலா ரூ. 700 முதல் ரூ. 1400 வரையிலான ஊதியத்தை கடந்த 14 ஆண்டுகளாகப் பெற்று வருகின்றனர்.
கடந்த 2003 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் அப்போது முதல்வராக இருந்த என். ரங்கசாமி, இவர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என சட்டப்பேரவையில் அறிவித்தார். பிறகு, 2010-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் வி. வைத்திலிங்கம், வளர்கல்வி ஊழியர்கள் புதிய திட்டமான காமராஜர் எழுத்தறிவு இயக்கத்தில் சேர்க்கப்பட்டு, ஊதியமும் உயர்த்தி வழங்கப்படும் என்றார். ஆனால், இதுவரை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
கடந்த 4 மாதங்களாக ஊதியமும் வழங்கப்படவில்லை. அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய நிலுவையும் வழங்கப்படவில்லை. இந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படபோவதாகவும் தகவல் கிடைக்கிறது.
அதிகாரிகள் இவ்வாறு முடிவு எடுத்தால், முதல்வர் ரங்கசாமி அதை அனுமதிக்கக் கூடாது. அவர் இந்தப் பிரச்னையில் தலையிட்டு வளர்கல்வி இயக்க ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...