கூட்டுறவு சங்க உதவியாளர் பணி தேர்வு: இணையதளத்தில் தேர்வுக் கூட அனுமதி சீட்டு

கூட்டுறவு சங்கங்களின் மாநில ஆள்சேர்ப்பு நிலையம் அறிவித்திருந்த உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வுக் கூட அனுமதி சீட்டு அனுப்பப்பட்டுள்ளது.
தேர்வுக் கூட அனுமதி சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து,
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பணியிடங்களுக்கானத் தேர்வு வரும் 9-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தகுதி உள்ள அனைவருக்கும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிக்கு தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள், www.tncoopsrb.org அல்லது www.tnsrbexam.org என்ற இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து, அச்சு நகல் எடுத்துக் கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கூடத்துக்கு வரும்போது, அனுமதி சீட்டில் புகைப்படம் மற்றும் கையொப்பம் இல்லாமல் இருந்தால், அதில் தங்களது புகைப்படத்தினை ஒட்டி கையொப்பம் இட்டு, ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்குப் புத்தகம், வாக்காளர் புகைப்பட அட்டை, பான் கார்டு இதில் ஏதேனும் ஒரு ஆவணத்தை சான்றாகக் கொண்டு வரவேண்டும்.
பதிவிறக்கம் செய்ய இயலாத உரிய
தேதி மற்றும் நேரத்துக்குள் விண்ணப்பிக்காதவர்கள் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பம் செய்ததற்கான ஆதாரத்தைக் காண்பித்து, தேர்வுக் கூட அனுமதி சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்விதம் அனுமதி சீட்டை பெற, அதற்கான படிவத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி விண்ணப்பம் செய்ததற்கான விவரங்களையும் அளித்து, அனுமதி சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம், என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...