கூகுள் போன்று மத்திய அரசு இணைதளம்:கபில் சிபல்

கூகுள் போன்று மத்திய அரசி்ன் பல்வேறு துறைகள்‌ தொடர்பாக இணையதளம் 2014-ம்ஆண்டில்துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். தேடுதல் வலைதளமான கூகுள் பன்முக தகவல்களை தருவதில் முன்னணி வலைதளமாக
உள்ளது. இ‌தனை போன்று மத்திய அரசின் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய புதிய ‌இணையதளம் துவக்கப்படஉள்ளது.
தேசிய தகவல் மையத்தின் (என்.டி.சி ) கட்டத்திற்கான விழா புதுடில்லியில்நடந்தது. 60 ஆயிரம் சதுரடி பரப்பளவில் கட்டப்பட்ட உள்ள தேசிய தகவல்மைய கட்டடவிழாவில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில்சிபல் கலந்துகொண்டார் .பின்னர்அவர்பேசியதாவது:மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் தொடர்பான விவரங்களை அறிய கூகுள் தேடுல் இன்ஜின் போன்று மத்திய அரசு புதிய இணைய தளத்தினை 2014-ம் ஆண்டிற்குள் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது எனது நீண்ட நாள் கனவு திட்டம் இதனை நிற‌ைவேற்ற ஆவலாக உள்‌ளேன். இந்த இணைய‌தளம் வாயிலாக மவுசை கிளிக்செய்தால் பல்வேறு அமைச்சகத்தின் துறை தொடர்பான தகவல்களை பொதுமக்கள் எளிதாக பார்வையிட முடியும்.தேவையான விவரங்களை பெறமுடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...