மாணவர்களுக்கு பணி வாய்ப்பு : "சிப்பெட்' நிறுவனம் தகவல்


"சிப்பெட்' தொழில்நுட்ப நிறுவனத்தில் படித்த மாணவர்கள் தொடர்ந்துள்ள வழக்கு குறித்து அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. சென்னை, கிண்டி, "சிப்பெட்' முதல்வர் பழனிவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய பிளாஸ்டிக்ஸ் மற்றும்

பொறியியல் தொழில் நுட்ப நிறுவனத்தில், 30 ஆயிரத்திற்கும் மேலான மாணவர்கள், கல்வி பயின்று, உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் உயரிய பணிகளில் பணியாற்றுகின்றனர். இந்நிறுவனத்தில் பயின்று, பணி கிடைக்காத மாணவர்கள் சிலர், இந்த ஆண்டு அக்டோபர் மாதம், 3ம் தேதி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 2010ம் ஆண்டு, சிப்பெட்டில், பயிற்சி மேற்கொண்ட, 100 மாணவர்களில், பெரும்பாலானோர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இவ்விவரத்தை, சிப்பெட் நிறுவனம் கோர்ட்டில் சமர்ப்பிக்க உள்ளது. வழக்கு தொடர்ந்துள்ள, ஒரு சில மாணவர்களின், கல்வித் திறனை பொறுத்து, அவர்களின் வேலை வாய்ப்பும் அமைகிறது. இதனை கருத்தில் கொள்ளாமல், இம்மாணவர்கள் தங்களின் சுய ஆதாயத்திற்காக, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். பயிற்சிகள் குறித்து,"சிப்பெட்' மூலம் வெளியிடப்பட்ட விளம்பரத்திலோ, வேறு வகையிலோ, மாணவர்கள் கூறுவது போல, எந்தவித வேலைக்கான உத்திரவாதமும் அளிக்கப்படவில்லை. இவ்வாறு பழனிவேலு தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...