பள்ளிகளில் பாரதியார் பிறந்தநாள்

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பாரதியார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
நெல்லித்தோப்பு: மகாத்மா காந்தி அரசு நடுநிலைப் பள்ளியில், பாரதியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியை வசந்தகுமாரி வரவேற்றார். தலைமையாசிரியர் அய்யம்பெருமாள், ஆசிரியர் பாஸ்கரராசு ஆகியோர், பாரதியார் குறித்து
சிறப்புரையாற்றினர். பாரதியார் குறித்து, மாணவ மாணவியர் பேச்சு, பாடல் வழங்கினர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, தலைமையாசிரியர் பரிசு வழங்கினார். ஆசிரியை ஜெயந்தி நன்றி கூறினார்.ஆசிரியை மீனா, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
திருக்கனூர்: சுப்ரமணிய பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளியில், பாரதியார் பிறந்த நாள் விழா நடந்தது. பள்ளி நிர்வாகி சம்பத் வரவேற்றார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் சிவக்குமார், ஸ்ரீராமன், வேல்முருகன் செய்தனர். ஆசிரியர் ஆரோக்கியதாஸ், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...