ரோமிங் ரத்து குறித்து மக்களிடம் கருத்து கேட்க "டிராய்' முடிவு

மொபைல் போனுக்கான, ரோமிங் கட்டணம் விரைவில் ரத்து செய்யப்பட உள்ளது. இதை அமல்படுத்துவதற்கு முன், பொதுமக்களின் கருத்து கேட்க, தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்(டிராய்) முடிவு செய்துள்ளது.இந்தியாவில், மொபைல் போன் பயன்பாட்டுக்காக,
மொத்தம், 22 தொலை தொடர்பு வட்டங்கள் உள்ளன.

இதில், ஒரே வட்டத்தில் உள்ள ஒரு மொபைலிலிருந்து, மற்றொரு மொபைலுக்கு பேசும்போது, உள்ளூர் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.ஆனால், ஒரு தொலை தொடர்பு வட்டத்திலிருந்து, மற்றொரு தொலை தொடர்பு வட்டத்திற்குள் போகும் போது, ரோமிங் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும்.வெளியே செல்லும் அழைப்புக்கும், உள்வரும் அழைப்புக்கும், ரோமிங் கட்டணம் செலுத்த வேண்டும். இது, மொபைல் சந்தாதாரருக்கு, மிகவும் சிரமமாக இருந்தது.

இந்நிலையில், கடந்த மே மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்ட, "புதிய தொலை தொடர்பு கொள்கை - 2012'ல் ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டது. இது, அடுத்தாண்டு அமலுக்கு வரும் என, கூறப்பட்டது.இந்நிலையில், இந்தியா முழுவதும், ஒரே மொபைல் போன் எண்ணை வைத்து கொள்ளும் வசதி, பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என, மத்திய அமைச்சர் கபில் சிபல் நேற்று முன் தினம் கூறியிருந்தார்.அண்டை மாநில நகரங்களுக்கு செல்லும் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு, ரோமிங் கட்டணம்

பெரும் தலைவலியாக இருந்தது.

உதாரணமாக, சென்னையை சேர்ந்த ஒருவர், திருப்பதி, பெங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு சென்றால், அந்த நகரத்திலிருந்து, தமிழத்தில் உள்ள ஒருவருடன் தொடர்பு கொண்டால், வழக்கமான கட்டணத்துடன், ரோமிங் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. அதே போல், அவருக்கு உள்வரும் அழைப்பில் பேசும் போது, ரோமிங் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. இந்த ரோமிங் கட்டணத்தை ரத்து செய்ய, கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டாலும், இதனால் ஏற்படும் வருமான இழப்பை எப்படி சரிகட்டுவது என்பது குறித்து, குழப்பம் ஏற்படுகிறது.

இது குறித்து, டில்லியில் நேற்று, "தொலைதொடர்பு இந்தியா 2012' மாநாட்டில் பங்கேற்ற, டிராய் சேர்மன் ராகுல் குல்லார் நிருபர்களிடம் கூறியதாவது:மொபைலுக்கான ரோமிங் கட்டணத்தை ரத்து செய்வது குறித்து, இன்று வரை முடிவு செய்யவில்லை. இது கட்டணம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், தேசிய அளவில் எப்படி ரோமிங் கட்டணத்தை அமல்படுத்துவது குறித்து, கேள்வி எழுகிறது. பொருத்தமான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.வெகு விரைவில், இது தொடர்பான முதல் கட்ட நடவடிக்கை எடுப்போம். இறுதி முடிவு எடுப்பதற்கு முன், பொது மக்களிடம் கருத்து கேட்கப்படும்.இவ்வாறு, ராகுல் குல்லார் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...