அரசு கலைக் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உயர்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

இன்று (22.01.2013) தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் அரசு கலைக்கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட ரூ. 100 கோடியை பயன்படுத்துவது குறித்தும்,
மேலும் 2011-2012, 2012-2013 தொடங்கப்பட்ட புதிய 22 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், 10 தொழில்நுட்ப கல்லூரிகள் 2 பொறியியல் கல்லூரிகள் மற்றும் ஐஐஐடி கல்லூரி ஆகியவைகளை தொடங்குவதற்கு புதிய இடங்களை தேர்வு செய்வது தொடர்பான தற்போதைய நிலை குறித்தும். புதியதாக கட்டப்படும் கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பது போல புதிய கல்லூரிகளில் சோலார் (Solar energy) வசதியை ஏற்படுத்துவது.
சில தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அரசின் முன் அனுமதியின்றி தொடங்கப்படும் பாடப்பிரிவுகள் அங்கீகரிக்கப்படாத நிலை ஏற்படும்போது அப்பாடங்களுக்கு  சமமான தகுதி (Equalance  certificate) கோருவது மற்றும் பல பொருள்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் உயர்கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, தொழில்நுட்ப கல்வி ஆணையர் ரமேஷ்சந்த் மீனா  இணைச் செயலாளர் உமாமகேஸ்வரி கல்லூரி கல்வி இயக்குநர் செந்தமிழ்ச்செல்வி, உயர்கல்வித்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...