அண்ணாமலை பல்கலை. மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு

புதுதில்லி மற்றும் தமிழகம், புதுச்சேரியில் மாணவிகள் மீதான பாலியல் பலாத்காரம் சம்பவத்தைக் கண்டித்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் திங்கள்கிழமை வகுப்புகளை

புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
அண்ணாமலைப் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் புல மாணவ, மாணவியர்கள் புதுதில்லி மற்றும் தமிழகம், புதுச்சேரியில் மாணவிகளின் பாலியல் பலாத்கார சம்பவத்தைக் கண்டித்தும், புதுதில்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் விரைவு விசாரணை நடத்தி, தீர்ப்பு மேல்முறையீடு செய்யாமல் குற்றவாளிகளுக்கு உடனடியாக தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாணவியர்களுக்கு உரியப் பாதுகாப்புத் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்தனர்.
ஊர்வலமாக சென்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோயில் முன்பு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் புதுதில்லியில் பாலியல் பலாத்காரத்தில் மரணமடைந்த மாணவிக்கு 2 நிமிடம் மௌனஅஞ்சலி செலுத்தினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...