"இந்தோ - இலங்கை மின் திட்டம்' ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை

பள்ளிக்கல்வி துறை சார்பில், கோவையில் நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில், ராமநாதபுரம் புனித ஜோசப் பள்ளி மாணவர்களின், "இந்தோ- இலங்கை மின் திட்டம்' என்ற படைப்பு, முதல் பரிசை தட்டிச் சென்றது. தமிழகம் முழுவதும் இருந்து, 93 பள்ளிகள்
சார்பில், 96 வகையான அறிவியல் சார்ந்த படைப்புகள், இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இதில், ராமநாதபுரம் புனித ஜோசப் பள்ளி மாணவர்கள் பாலமுருகன், பாசில் தயாரித்த, "இந்தோ- இலங்கை மின் திட்டம்' என்ற படைப்புக்கு முதல் பரிசு கிடைத்தது.
இதுகுறித்து இவர்கள் கூறியதாவது: இயற்கை முறையை பயன்படுத்தி, எவ்வாறு மின் உற்பத்தி செய்வது' என்ற தலைப்பை தேர்வு செய்தோம். இன்றைய சூழலில், வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முன்னோடியாக திகழ்கிறது. இந்தியாவில், தொழிற்சாலைகளை துவங்க, பல நாடுகள் முன் வந்துள்ளன.

100 அடிக்கு ஒரு காற்றாலை:


இந்நிலையில், நமக்கு அத்தியாவசிய தேவையாக இருப்பது மின்சாரம். மின் உற்பத்திக்கு, இந்தியா பல திட்டங்களை வகுத்து வந்தாலும், பற்றாக்குறை தொடர்கிறது. இதை சரிசெய்ய உருவாக்கப்பட்டதே,"இந்தோ- இலங்கை மின் திட்டம்'. இந்தியாவின் தென்கோடியில் உள்ள ராமேஸ்வரத்தில் கோடியக்கரை- இலங்கைக்கு இடையே (18 கடல் மைல்) கான்கிரீட் பாலம் அமைக்க வேண்டும். ஆண்டு முழுவதும் இந்த பகுதியில் பலத்த கடல் காற்று வீசுவதால், முதல்கட்டமாக பாலத்தின் பக்கவாட்டில், 100 அடிக்கு ஒரு காற்றாலை வீதம், இருபுறமும் தலா 300 காற்றாலைகள் நிறுவ வேண்டும். ஒரு காற்றாலை மூலம் 100 "மெகாவாட்' வரை, மின்சாரம் தயாரிக்கலாம். 300 காற்றாலைகள் மூலம், மொத்தம் 60 ஆயிரம் மெகாவாட் வரை, மின்சாரம் தயாரிக்க முடியும்.
இது "பாலமாக' அமையும் :


இரண்டாம் கட்டமாக, பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில், சோலார் பேனல்களை (தகடுகள்) பொருத்தி, அதன் மூலம் தினமும் 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். மூன்றாம்கட்டமாக, பாலத்தின் கான்கிரீட் தூண்களில் அமைக்கப்படும் "டைடல் வேவ் எனர்ஜி' மூலம் கடல் அலைகளில் இருந்தும் மின்சாரம் தயாரிக்கலாம். இதுபோன்ற திட்டம் உருவாக்க குறைந்தது 1,000 கோடி ரூபாய் செலவாகும். இத்திட்டம் நிறைவேறும் பட்சத்தில், மின் தட்டுப்பாடு என்ற பிரச்னையே இருக்காது. இந்தியா- இலங்கை நட்புறவுக்கு, இது "பாலமாக' அமையும். இந்த திட்டத்தின் மாதிரி அமைக்க, ஒரு மாதம் ஆனது. பள்ளி தாளாளர் ராஜமாணிக்கம், முதல்வர் சகாயமேரி, ஆசிரியர் ஜோசப் ஆகியோர் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தனர். மாநில போட்டியில் முதலிடம் பெற்றதால், ஜன., 20 ல் கர்நாடகாவில் நடைபெறவுள்ள, தென்னிந்திய அளவிலான கண்காட்சியிலும் பங்கேற்க தயாராகி வருகிறோம், என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...