புதிய வாக்காளர்களுக்கு நாளை அடையாள அட்டை விநியோகம்

விழுப்புரத்தில், ஜனவரி 25-ம் தேதி நடைபெற உள்ள வாக்காளர் தினத்தன்று, புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை விநியோகம் செய்யப்படும் என்று ஆட்சியர்
வா. சம்பத் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: 2013ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் 98,315 புது வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு, ஜனவரி 10-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இப்புதிய வாக்காளர்களுக்கு ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த அட்டை வாக்குச்சாவடி அமைக்கப்பட்ட மையங்களில், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களால் வழங்கப்பட உள்ளது.
இதுதவிர, ஒவ்வொரு வருவாய் கோட்டாட்சியர் தலைமையிடத்திலும், ஒவ்வொரு வட்டத்திலும் சார் ஆட்சியர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுவதுக்கும், உறுதி மொழி ஏற்பதுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் மனித சங்கிலி, ஊர்வலம், தேசிய மாணவர் படையினரின் ஊர்வலம் நடத்தப்பட உள்ளன. தவிர, பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கிடையே கட்டுரை, பேச்சுப்போட்டி நடத்தி பரிசு வழங்குவதுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நகர்மன்றப் பகுதிகளில் திண்டிவனம் மற்றும் விழுப்புரம் நகர்மன்ற ஆணையர்கள் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுவதுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் 25-ம் தேதி காலை ராமகிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தின விழா நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...