மாமதுரை போற்றுவோம்' விழா ஏற்பாடுகள்: ஆட்சியர் ஆய்வு

மாமதுரை போற்றுவோம்' விழாவுக்கான முப்பரிமாண காட்சி விளம்பரங்களை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா ஆகியோர்  திங்கள்கிழமை திறந்து வைத்தனர்.
 மதுரையின் பாரம்பரிய பெருமைகளை
விளக்கும் வகையில், பிப்ரவரி 8, 9, 10 ஆம்  தேதிகளில் "மாமதுரை போற்றுவோம்' விழா நடத்தப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் விளக்குத்தூண், பழங்காநத்தம் ரவுண்டானா,  பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள மேலவாசல் கோட்டை ஆகிய இடங்களில் முப்பரிமாண காட்சி விளம்பரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 இதில் விளக்குத்தூண் பகுதியில் திமிறி ஓடும் காளை மாட்டின் திமிலைப் பிடித்து வீரன் ஒருவன் அடக்கும் காட்சி சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
 பழந்தமிழரின் வரலாற்றை பறைசாற்றும் கல்வெட்டுகள் நிறைந்த பாறையில் இருந்து வெளியே செல்லும் யானையின் சிற்பக்காட்சி பழங்காநத்தம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. மேலவாசல் கோட்டையில் 5 யானைகளின் முகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  இந்த முப்பரிமாணக் காட்சி விளம்பரங்களை ஆட்சியர், மேயர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
 நிகழ்ச்சியில்  மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபால், விழாக்குழுத் தலைவரும் அருள்மிகு மீனாட்சி கோவில் தக்காருமான கருமுத்து தி.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...