மரபணு அறிவியலை புறக்கணிக்கும் நாடுகள் வளர்ச்சியில் பின் தங்கும்

"மரபணு அறிவியலை புறக்கணிக்கும் நாடுகள், வளர்ச்சியில் பின்தங்க நேரிடும்' என, நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் ழான் மேரி லேன் பேசினார்.புதுச்சேரி பல்கலைக்கழக இயற்பியல் துறை சார்பில், "பொருளிலிருந்து உயிர், அதற்கு காரணம் வேதியியலா' என்ற
தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு, பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவில், நோபல் பரிசு பெற்ற, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வேதியியல் பேராசிரியர் ழான் மேரி லேன் பேசியதாவது: நாம் வாழும் இந்த பூமி, 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன், சூரியனிலிருந்து வெடித்து சிதறி உருவாகியது. இப்பேரண்டத்தில் பிரிந்த பூமி, பரிணாம வளர்ச்சி அடைந்து, தற்போது பல கட்டமைப்புடைய மூலக்கூறுகளையும், சிந்திக்கும் திறன் கொண்ட உயிரோட்டப் பொருள்களையும் படைத்துள்ளது. இப்பேரண்டத்தில், இது வரை, பூமி மட்டுமே உருவாகி இருப்பதாக கருதுகிறோம்; இப்பூமி இத்துடன் நிற்கவில்லை; தொடர்ந்து பரிமாண வளர்ச்சியடைந்து வருகிறது. மரபணு அறிவியல் தான் எதிர் காலத்தில் உலகை ஆளும். மரபணு அறிவியலில் முக்கியத்துவத்தை உணர்ந்து, பல நாடுகள், இத்துறையில் கால்தடம் பதித்து ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளன. சில நாடுகள் இதை வேண்டாம் என்று புறக்கணிக்கின்றன. நமது உடலே மரபணு மாற்றத்தினால் ஏற்பட்டது என்பதை, நாம் மறந்துவிடக் கூடாது. எனவே, இத்துறையை புறக்கணிக்கும் நாடுகள் வளர்ச்சியில் பின்னடைவை சந்திக்க நேரிடும். இவ்வாறு ழான் மேரி லேன் பேசினார். கலந்துரையாடலில், கல்வியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும், அவர் பதிலளித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...