நாளை துவங்குகிறது "சரள் கவுன்ட் டவுன்'


 பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ள, "சரல்' செயற்கைக்கோளுக்கான, 59 மணி நேர, "கவுன்ட் டவுன்' நாளை துவங்குகிறது.

இந்தியா - பிரான்ஸ் கூட்டு முயற்சியில், சரள் என்ற புதிய செயற்கைக் கோளை, இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது. கடல் பற்றிய
ஆராய்ச்சிக்காக, இந்த செயற்கைக் கோளை வடிவமைத்து உள்ளனர். இது, 400 கிலோ எடை கொண்ட து. பிரான்ஸ் நாட்டின் சி.என்.இ.எஸ்., விண்வெளி ஆய்வு நிறுவனம், சரள் உதவியுடன் கடல் பற்றிய அனைத்து ஆய்வுகளையும் மேற்கொள்கிறது. பூமியில் நிலவும் காலநிலை, கடல் சார்ந்த வானிலை ஆகியவை குறித்து ஆய்வு செய்து, துல்லியமான புள்ளி விவரங்களை அளிக்கும். சரள் செயற்கைக்கோளுடன், ஆஸ்திரியா, கனடா நாடுகளின், தலா இரு செயற்கைக் கோள்களும், டென்மார்க், இங்கிலாந்து நாடுகளின், தலா ஒரு செயற்கைக்கோள் என, மொத்தம் ஆறு சிறிய செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன. கடந்தாண்டு, டிச., 12ம் தேதி, இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த, ஏற்பாடுகள் நடந்தன. தொழில்நுட்ப பிரச்னை காரணமாக, செயற்கைக் கோளை ஏவும் திட்டம், கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்த நிலையில், வரும், 25ம் தேதி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து, மாலை, 5:56 மணிக்கு, பி.எஸ்.எல்.வி., சி - 20 ராக்கெட் மூலம், சரள் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான ஆயத்தப் பணிகளை, விஞ்ஞானிகள் குழு செய்து வருகிறது. ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவது தொடர்பாக, இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதை தொடர்ந்து, செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான, 59 மணி நேர கவுன்ட் டவுன் துவங்குகிறது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...