தர்மபுரி அருகே கல்லூரி பஸ்கள் நேருக்கு நேர் மோதி 4 மாணவிகள் உடல் நசுங்கி சாவு

தர்மபுரி அருகே இரண்டு தனியார் கல்லூரிக பஸ்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 4 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 35 மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.தர்மபுரி மாவட்டம்
பாப்பாரப்பட்டி அருகே உள்ள ஆட்டுக்காரன்பட்டியில் தனியார் கலை அறிவியல் கல்லூரியிலும், நல்லானூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியிலும் ஏராளமான மாணவ, மா ணவிகள் படிக்கின்றனர். இவர்கள் தினமும் கல்லூரிகளுக்கு சொந்தமான பஸ்களில் சென்று வருகின்றனர். நேற்று மாலை கல்லூரி முடிந்து பஸ்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். மல்லாபுரம் என்னுமிடத்தில் வந்தபோது இரு கல்லூரி பஸ்களும்  நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதனால், முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மாணவ, மாணவிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறினர். அக்கம்பக்கத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் பி.இ. இறுதி ஆண்டு மாணவி தர்மபுரி பிடமனேரி காயத்திரி (21), பி.ஏ. 2ம் ஆண்டு மாணவிதர்மபுரி அன்னசாகரம் பானுஸ்ரீ(19), பி.ஏ., 3ம் ஆண்டு மாணவி பென்னாகரம் பி.அக்ரகாரம் ஸ்ரீதேவி (20) அதே இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் பி.காம் முதலாம் ஆண்டு மாணவி காரிமங்கலம் உச்சம்பட்டியைச் சேர்ந்த சின்னசாமி மகள் குமுதா(19) உயிரிழந்தார்.

இரு பஸ்க ளிலும் 35 மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர். இவர்கள் 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் களில் தர்மபுரி அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டனர்.முன்னதாக மாவட்ட எஸ்பி அஸ்ராகர்க், டி எஸ் பிக்கள் அரசு, நடராஜ் உட்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.விபத்து நடந்ததும் இரு பேருந்துகளின் டிரைவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அவர்களில் ஒருவர் பென்னாகரம் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அவரிடம் விசாரித்து வருகின்றனர்.பெற்றோர் முற்றுகை: தகவல் அறிந்ததும் இரு கல்லூரி மாணவ, மாணவிகள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் குவிந்தனர். மேலும், பலியாகி விட்டதாக தகவல் பரவியதால் பெற்றோரும் திரண்டு வந்து மருத்துவமனையை முற்றுகையிட்டனர். ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பதறி அடித்துக்கொண்டு வந்ததால், எங்கு பார்த்தாலும் அழுகுரலாகவே கேட்டது. காயமடைந்தவர்களும், பலியானவர்களையும் காண அலைபாய்ந்தது பரிதாபமாக இருந்தது.

அடையாளம் காட்டுவதில் சிக்கல்
இறந்தவர்களின் விவரம் அறிய சடலங்களை பார்த்து அடையாளம் காண்பிக்க இரு கல்லூரிகளில் இருந்தும் ஒவ்வொரு துறையைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் அழைக்கப்பட்டனர். ஆனால், முகங்கள் முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்பட்டதால் அடையாளம் காண முடியவில்லை. அப்போது, மாணவ, மாணவிகள் கதறி துடித்தது பார்க்க பரிதாபமாக இருந்தது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...