மத்திய அரசு பணியாளர் தேர்வு முறை மாற்றங்கள் நிறுத்தம்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு முறையில் கொண்டுவரப்பட்ட பல்வேறு மாற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வு முறையில் மாநில மொழிகளைப் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படும் வகையில் மாற்றங்கள்
செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
இன்று காலை முதல் 3 முறை மக்களவை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் முடங்கியது. இந்த நிலையில், மக்களவையில் பேசிய மத்திய இணை அமைச்சர் வி. நாராணயசாமி, இந்த விஷயம் குறித்து யுபிஎஸ்சி அதிகாரிகளுடன் மத்திய அரசு விரிவாக ஆலோசனை நடத்திய உரிய நடவடிக்கை எடுக்கும். அதற்கிடையே, யுபிஎஸ்சி வெளியிட்ட புதிய மாற்றங்கள் குறித்த அறிவிப்பு நிறுத்தி உடனடியாக வைக்கப்படுகிறது என்று அறிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...