சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே, பூமி வரும் போது,
சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதை, இன்று அதிகாலை, 1:37 மணிக்கு பார்க்க
முடியும். இந்த பகுதி சந்திர கிரகணத்தை, ஆஸ்திரேலியா, ஆசியா (வடகிழக்கு
பகுதி தவிர்த்து), ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் அன்டார்க்டிகா கண்டங்களில் காண முடியும். இந்த ஆண்டில், மொத்தம், ஐந்து கிரகணங்கள் ஏற்பட உள்ளன. அவற்றில், மூன்று, சந்திர கிரகணம்; இரண்டு, சூரிய கிரகணம். முதல் சந்திர கிரகணம், இன்று தென்பட உள்ளது. சூரிய கிரகணத்தைப் பார்க்க, புற ஊதாக் கதிர்கள் ஊடுறுவாத, கறுப்பு கண்ணாடியை பயன்படுத்த வேண்டும்; சந்திர கிரகணத்தை, வெறும் கண்களால் பார்க்கலாம்; எந்த தீங்கும் ஏற்படாது. இன்று தென்படும் சந்திர கிரகணம், 21ம் நூற்றாண்டின், மிகக் குறுகிய, மூன்று சந்திர கிரகணங்களில், நீண்ட நேரம் தெரியும் சந்திர கிரகணம்; 27 நிமிடங்களுக்கு தெரியும்.
வரும், 2034, செப்டம்பர், 28ம் தேதி, 26.7 நிமிடங்களும், 2082ம் ஆண்டில், 25.5 நிமிடங்களும் சந்திர கிரகணங்கள், மிகக் குறைவான நேரத்தில் தெரியும் என, அமெரிக்காவின், "நாசா' விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொலைநோக்கிகள் : சந்திர கிரகணம் குறித்து, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய இயக்குனர், அய்யம் பெருமாள் கூறியதாவது: சென்னை தவிர, திருச்சி அண்ணா அறிவியல் மையத்திலும், வேலூர் மண்டல அறிவியல் மையத்திலும், சந்திர கிரகணத்தை பார்க்க நான்கு தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. வரும், மே 10ம் தேதியும், நவ., 30ம் தேதியும் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதுவும் இந்தியாவில் தெரிய வாய்ப்பில்லை. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் பார்க்க முடியும். இவ்வாறு, அய்யம் பெருமாள் கூறினார்.