7 மடங்கு ஒலி வேகத்தில் தாக்குதல்: பிரமோஸ் ஏவுகணை ஆய்வில் தீவிரம்

""ஏழு மடங்கு ஒலி வேகத்தில், இலக்கை தாக்கக் கூடிய, "பிரமோஸ் ஏவுகணை' விரைவில் தயாரிப்பதற்கான, ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம்,'' என, விஞ்ஞானி சிவதாணு
பிள்ளை தெரிவித்தார்.
சேலத்தில், ஏரோபார்க் நிறுவனம் சார்பில், பிரமோஸ் ஏவுகணை மேலாண்மை இயக்குனர், சிவதாணு பிள்ளை கூறியதாவது:
பிரமோஸ் ஏவுகணை, இந்தியா - ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாக்கப்பட்டது. இந்தியாவில், 1999ம் ஆண்டு, இது போன்ற ஏவுகணை எதுவும் இல்லை. 98ம் ஆண்டு, ரஷ்ய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை இன்ஜின் பெறப்பட்டு, பிரமோஸ் உருவாக்கப்பட்டது.
உலகில் உள்ள மற்ற நாடுகளில், நிலத்தில் இருந்து, நிலத்தில் தாக்கக் கூடிய ஏவுகணைகள் தான் உள்ளன. கடந்த, 15 ஆண்டுகளில், பல்வேறு கட்ட ஆராய்ச்சி மூலம், நிலத்தில் இருந்து நிலம், தண்ணீரில் இருந்து தண்ணீருக்குள்ளும், வான்வெளியில் துல்லியமாகச் சென்றும் இலக்கைத் தாக்கும் விதத்தில், பிரமோஸ் உருவாக்கப்பட்டு உள்ளது.
ஏழாம் இடம்
கடந்த, 1980ம் ஆண்டு இந்தியாவில், "பி.எஸ்.எல்.வி.,' ராக்கெட் தயாரித்த போது, இது போன்ற ராக்கெட் தயாரிப்பில் இந்தியா, ஏழாம் இடத்தில் இருந்தது.
அக்னி ஏவுகணை தயாரித்த போது, உலகின், ஆறாவது நாடாகவும், பொக்ரான் அணு குண்டு வெடிப்பில் இந்தியா, ஆறாவது இடத்திலும் இருந்தது.
ஆனால், பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்த ஏவுகணை, 300 கி.மீ., தொலைதூரம் சென்று சரியான இலக்கை, மூன்று மடங்கு ஒலி வேகத்தில் சென்று தாக்கக் கூடியது.விரைவில், ஏழு மடங்கு ஒலி வேகத்தில் சரியான இலக்கைத் தாக்கக் கூடிய, பிரமோஸ் ஏவுகணை தயாரிக்கும் ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவில், 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், 60 கோடி பேர் உள்ளனர். இவர்களை சரியான முறையில் வழி நடத்துவதன் மூலம் இந்தியா, அபார வளர்ச்சி அடையும். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், "விஷன் - 2020' என்ற திட்டம் மூலம், 10 முதல், 20 கிராமங்களை ஒன்றிணைத்து, கிராமிய கலாசாரம் மாறாமல், நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும்.
தன்னிறைவு
தற்போது, இந்தியாவில், 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், விஞ்ஞான தொழில்நுட்ப உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளன.
நமக்கு தேவையான விஞ்ஞான உதிரி பாகங்கள் மற்றும் விஞ்ஞான தொழில்நுட்பங்களில் தன்னிறைவு பெற்றுள்ளோம்.
மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், அணு மின் நிலையம் அவசியத் தேவையாக உள்ளது. அணு மின் தயாரிப்பு, பாதுகாப்பான தொழில் நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டு உள்ளது குறித்து மக்களிடையே, அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஹைட்ரஜன், யுரேனியம், தோரியம் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும்.
இந்தியாவில், வெளிநாடுகளின் உதவியுடன், யுரேனியம் மூலம் அணு உலைகளில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. உலகில், மூன்றில் ஒரு பங்கு தோரியம் இந்தியாவில் கிடைக்கிறது.
தோரியம் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான ஆராய்ச்சி, சென்னை கல்பாக்கம் ஆய்வு மையத்தில் நடந்து வருகிறது. இவ்வாறு, சிவதாணு பிள்ளை தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...