திண்டுக்கல் மாவட்டத்தில், 9ம் வகுப்பு, ஆங்கிலம்
இரண்டாம் தாளில், 10ம் வகுப்பு வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. 65க்கு பெற்ற
மதிப்பெண்ணை, 100க்கு கணக்கிட, கல்வித் துறை
உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில், நேற்று முன்தினம், 9ம் வகுப்பு, ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. இதில், 35 மதிப்பெண்கள், 10ம் வகுப்பு புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. இதனால், மாணவர்கள் பதில் தர முடியாமல் சிரமம் அடைந்தனர். இது குறித்து, திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், சுகுமார் தேவதாஸ் கூறியதாவது: வினாத்தாள் எடுத்த ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அவர், "பிரின்டிங் பிரஸ்' மீது குற்றம் சுமத்துகிறார்.
ஆங்கிலம் இரண்டாம் தாளில், 35 மதிப்பெண்களுக்கு விடையளிக்க முடியாததால், 65 மதிப்பெண்களுக்கு எடுக்கும் மதிப்பெண், 100க்கு கணக்கிடப்படும். வினாத்தாளை தவறாக எடுத்த ஆசிரியர் மீது, துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.