கிருஷ்ணகிரி மாவட்டம் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகத்தின் சார்பில்விடைத்தாள் திருத்தும் மையத்தில் வாயிற் கூட்டம்


 புதன்  கிழமை (17.02.2013) கலை 9.00 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம்  அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர்கழகத்தின் சார்பில்  விடைத்தாள்
திருத்தும் மையத்தில் வாயிற் கூட்டம் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. வாயிற் கூட்டத்தில் பதவிஉயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை  முன் வைத்து
 மாநில பொதுச்செயலாளர் திரு அ.வ.அண்ணாமலை அவர்கள் சிறப்புரையாற்றினர் . இந்த வாயி
ற் கூட்டத்தில் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரிய பெருமக்கள்  அனைவரும் திரளாக பங்கேற்றனர் .
வாயிற் கூட்டத்தில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் :
1.உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு 50% பதவி உயர்வு
பெற்ற பட்டதாரி ஆசிரியருக்கும் 50% நேரடி நியமனம் பெற்ற பட்டதாரி
ஆசிரியருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் ,
2.அரசாணை எண் 720 ஐ எந்த காரணம் கொண்டும் திருத்தம் செய்யக் கூடாது என்றும்,
3. மாணவர் நலன் கருதி அனைத்து மேல் நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 10 ம்
வரை உள்ள வகுப்புகளை நிர்வாகம் செய்ய உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
பணியிடம் ஒன்று உருவாக்கி அதில் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி
ஆசிரியர்களுக்கு 50% பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும்
4. பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு தாள் ஒன்றுக்கு ரூ.30 /- வழங்க வேண்டும் என்றும்,
5. பத்தாம் வகுப்பு தேர்வு அறைக் கண்காணிப்பாளர் பணிக்கு தேர்வு ஒன்றுக்கு ரூ.300 /- வழங்க வேண்டும் என்றும்,
இது போன்று பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
                                                       சி. செந்தில் ,
                                                        பட்டதாரி ஆசிரியர் (வரலாறு),
                                                        அ .ஆ . மே . நி. பள்ளி ,
                                                        கவேரிப்படணம் .
                              
                              (9976810381)

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...