வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு மத்திய சமூக நீதித் துறையின் அம்பேத்கர் தேசிய விருது கிடைத்துள்ளது.
மத்திய சமூக நீதித் துறையின் கீழ் இயங்கும் டாக்டர் அம்பேத்கர்
பவுன்டேஷன் சார்பில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய சிறப்பு திறன் விருது வழங்கப்படுகிறது.
தேசிய அளவில் இரண்டாமிடத்துக்கு தேர்ச்சிப் பெற்ற சிதம்பரம் வீன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் ஆர்.முனீஷ்வரன் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர் ஆர்.முனீஷ்வரனுக்கு மத்திய சமூக நீதித்துறை சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழை வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.
விருது பெற்ற மாணவரை, பள்ளித் தாளாளர் வீனஸ் எஸ்.குமார் மற்றும் தலைமை ஆசிரியர் ஜி.மகேஷ்சுந்தர் ஆகியோர் பாராட்டினர்.