தேவகோட்டை திருமணவயல் பள்ளியில் கல்வித் திருவிழா நடைபெற்றது.
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மதிவாணன் தலைமை வகித்தார்.
வட்டாரவள மைய மேற்பார்வையாளர் பீட்டர்லெமாயூ முன்னிலை
வகித்தார்.
தலைமையாசிரியை பத்மாசாந்தகுமாரி வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.
கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்கள் 100 திருக்குறள், 99 தமிழ் பூக்கள், 150-க்கும் மேற்பட்ட பொதுஅறிவு கேள்விகளுக்கான விடைகளை கூறினர்.
இதில் பள்ளிமேலாண்மைக்குழு உறுப்பினர்கள் நடத்திய கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இப்பள்ளியில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட புரவலர் திட்டத்துக்கு ரூ. 55,000 பொதுமக்களால் வழங்கப்பட்டது.
இதில் ஆசிரியர் பயிற்றுநர் கார்த்திகேயன், ஊராட்சிமன்றத் தலைவர் சர்மிளாதேவி, கிராம கல்விக்குழு உறுப்பினர்கள் ராமையா, திருச்செல்வம், கலைவேந்தன், வழக்குரைஞர்கள் லோகநாதன், திருப்பதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.