தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் நடத்திய தேர்வுகளுக்கான முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படுகின்றன என்று அந்த
பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் எம்.பி.ஏ., முதுநிலை, இளநிலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வுகளை ஜனவரி 27-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடத்தியது.
இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகள் (எம்.சி.ஏ. மற்றும் எம்.எஸ்.பி.எல். தவிர்த்து) செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) வெளியிடப்படுகின்றன. தேர்ச்சி பெற்றவர்கள் மொத்த மதிப்பெண் சான்றிதழை ரூ. 500 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
மறு மதிப்பீட்டுக்கு ரூ. 400-ஆம், மறு கூட்டலுக்கு ரூ. 100-ஆம், விடைத்தாள் நகல் பெறுவதற்கு ரூ. 250-ஆம் செலுத்தவேண்டும். இதற்கான விண்ணப்பங்களை தேர்வுகள் கட்டுப்பாட்டாளர், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், 577, அண்ணா சாலை, சென்னை - 15 என்ற முகவரியில் மே 20-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். முடிவுகளை www.tnou.ac.in, www.southindia.com, www.indiaresults உள்ளிட்ட இணையதள்களில் தெரிந்துகொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.