சமூக சமத்துவர்களுக்கான மருத்துவர் சங்க பொது செயலர், ரவீந்திரநாத் கூறியதாவது:
மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் மூலம், தகுதி தேர்வு நடத்தி, அரசு
மருத்துவமனையில், 2,000 மருத்துவர்களை, தற்காலிகமாக, தமிழக அரசு நியமிக்க உள்ளது. தற்காலிக பணியிடங்களுக்கு, இன சுழற்சி முறையில், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், பணி நியமனம் வழங்கும் நடைமுறைக்கு எதிரான முயற்சியை, தமிழக அரசு, கைவிட வேண்டும்.
மூன்றாண்டுகளுக்கு மேலாக, அரசு மருத்துவமனைகளில், தற்காலிகமாக பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சிறப்பு தேர்வு நடத்தி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 28 ம் தேதி, சென்னை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு, ரவீந்திரநாத் கூறினார்.