கரூர், வாங்கல் சாலையில் வள்ளலார் கோட்டத்தில் அமைந்திருக்கும் குருதேவர் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் நீங்கள் நுழைந்தால்...
'என்ன இது, பள்ளிக்கூடத்துக்கு நடுவுல வயக்காடு?' என்று ஒரு நிமிடம் தடுமாறாமல் இருக்க மாட்டீர்கள்!
காய்கறிகள், கீரைகள் என்று வரிசையாக அணிவகுக்கும் பயிர்கள்... உங்களை அசரடிக்கும்! அத்தனையும் அந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ விவசாயிகளின் கைவண்ணம்தான்!
'தேர்வில் வெற்றி பெறுவதற்காக பள்ளிப் பாடம், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்காக பசுமைப் பாடம்’ என்றபடி பள்ளி வளாகத்திலேயே விவசாயம் செய்து அசத்திக் கொண்டிருக்கும் இந்த மாணவர்கள் அனைவருமே 'பசுமை விகடன்' வாசகர்கள் என்பது, ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!
இதுபோதாதா, 7ம் ஆண்டு சிறப்பிதழுக்கு இந்த மாணவர்களை சந்திக்க..! அந்த வளாகத்தில் நாம் போய் இறங்கியதுமே.... குஷியோடு நம்மை சூழ்ந்துகொண்ட மாணவர்கள், மடைதிறந்த வெள்ளமெனக் கொட்டத் தொடங்கினார்கள்.
வகுப்பறையில் பசுமை விகடன்... பள்ளி வளாகத்தில் வயல் காடு...