கடந்த டிசம்பரில், 2,300க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படவில்லை. தற்போது இதில், பொருளியல்,
வணிகவியல், வரலாறு ஆகிய பாடங்களில், 120 இடங்களை நிரப்ப, வரும், 23, 24 தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. சென்னை, சேலம், கோவை, திருச்சி, மதுரை, விழுப்புரம் மற்றும் நெல்லை ஆகிய ஏழு இடங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கு, 3,200 பேர் அழைக்கப்பட்டு உள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.