சமச்சீர் கல்வி அறிமுகம் எதிரொலி: மெட்ரிகுலேசன் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக மாற்றம் 200–க்கும் மேற்பட்ட பள்ளிகள் மாறின

தமிழகத்தில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து 200–க்கும் மேற்பட்ட மெட்ரிகுலேசன் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு
மாறியுள்ளன.
சமச்சீர் கல்வி
தமிழக அரசு சென்ற 2 வருடங்களுக்கு முன்பு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த கல்வித்திட்டத்தின் கீழ் மெட்ரிகுலேசன் பள்ளிகள், அரசு பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் அனைத்திற்கும் ஒரே பாடத்திட்டம் ஏற்படுத்தப்பட்டது.இதனால் போட்டி தேர்வுகளில் எந்த பாரபட்சமும் இல்லாமல் அனைவரும் பங்கேற்க முடிந்தது. ஆனால் சமச்சீர் கல்விப்பாடத்திட்டத்தில் கல்வியின் தரம் குறைவாக இருப்பதாக தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் குற்றம் சுமத்துகின்றன.இதுகுறித்து கல்வியாளரும், மதுரையில் உள்ள மகாத்மா பள்ளிகளின் மூத்த முதல்வருமான பிரேமலதா கூறியதாவது:–சமச்சீர் கல்வி பாடத்திட்டம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். போட்டிகள் நிறைந்த இந்த காலகட்டத்தில், போட்டி தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு ஏற்ப பாடத்திட்டம் அமைக்க வேண்டும். நவீன தகவல்களை பாடத்திட்டத்தில் அவ்வப்போது சேர்க்க வேண்டும்.
அறிவுத்திறன்...
அப்போது தான் உலகம் எதிர்நோக்கியுள்ள சவால்களை சமாளிக்க முடியும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் செயல்வழிக் கற்றலை அடிப்படையாக கொண்டுள்ளது. இதனால் மாணவர்களின் அறிவுத்திறன் செறிவூட்டப்படுகிறது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம் நகர்ப்புற மாணவர்களுக்கு, கிராமப்புற மாணவர்களுக்கு என தனித்தனியாக பாடத்திட்டம் வைத்துள்ளது.வருடந்தோறும் தேசிய பாடத்திட்ட அமைப்பு குழு (என்.சி.எப்.டபிள்யூ) மூலம் பாடத்திட்டம் குறித்து பரிசீலனை செய்கிறது. இதனால் மாணவர்கள் அன்றாட தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தங்களை உருவாக்கி கொள்ள முடிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
 200–க்கும் மேற்பட்ட
இதற்கிடையே, நிறைய மெட்ரிகுலேசன் பள்ளிக்கூடங்கள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு மாறி வருகின்றன. இதுகுறித்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தமிழக மண்டல அலுவலர் டி.டி.எஸ்.ராவ் கூறியதாவது:–சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 6–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் அனுமதி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2012–ம் வருடம் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் 280 பள்ளிக்கூடங்கள் இருந்தன.தற்போது சுமார் 439 சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்கள் உள்ளன. இன்னும் நிறையபேர் விண்ணப்பம் செய்துள்ளனர். மத்திய அரசின் ஒப்புதல், ஆய்வுக்கு பிறகு அந்த பள்ளிகளுக்கும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட அனுமதி வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...