சரோஜினி நாயுடு நினைவு பரிசை பெற பெண்கள் முன்னேற்றம் பற்றிய கட்டுரை
வெளிவந்த படைப்பாளிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏக்தா
தொண்டு நிறுவன புரகிராம் ஆபீசர் காயத்ரி
நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கிராமப்புற பெண்கள் பல்வேறு வகைகளில் முன்னேறி வருகின்றனர். அவர்கள் அரசு வழங்கும் இலவசங்களை வழங்கும் ஏஜன்டுகளாக மட்டுமல்லாமல், எவ்வாறு சமூக பிரச்னைகளை அணுகுவது என்பது குறித்து பெண்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். மாறிவரும் சூழலில் பலர் சாதனை பெண்களாக உருவெடுத்துள்ளனர். பெண்கள் முன்னேற்றத்தைப் பற்றியும், உள்ளாட்சி பெண் பிரதிநிதிகள் எவ்வாறு திறமையுடன் ஆட்சி செய்வது என்பது பற்றியும் வெற்றிக் கட்டுரை படைக்கும் பத்திரிகையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆண்டுதோறும் சிறப்புத் திட்டத்தில் 3 பேருக்கு சரோஜினி நாயுடு நினைவு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 13 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் இந்தத் திட்டத்தில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பத்திரிகையாளர்கள் வெற்றிக் கட்டுரை அளித்து பரிசு பெற்றுள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் இருந்து 3 பேர் பரி” பெற்றுள்ளனர். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து பரிசு பெறுவதற்கான கட்டுரைகள் ஏதும் வெளிவரவில்லை. அதனால் பத்திரிகையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மாவட்டம் தோறும் பத்திரிகை நிருபர்களை சந்தித்து பரிசுத் திட்டத்தின் நோக்கம் பற்றி விரிவாக எடுத்துக் கூறி வருகிறோம். இதற்காக தமிழகம் முழவதும் ஏக்தா, தீப்ஸ், சீமா, வெளிச்சம், சீட்ஸ் ஆகிய தொண்டு நிறுவனங்கள் அந்தந்த மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். இக்கட்டுரைகள் 2012ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி முதல் வரும் ஜூன் 15ம் வரை வெளியான கட்டுரைகள் இந்தச் சிறப்பு திட்டத்தில் இடம் பெறுகின்றன. அவ்வாறு வெளி வந்துள்ள கட்டுரைகளை வரும் ஜூன் 15ம் தேதிக்குள் நெ.53-ஏ, சர்ச் தெரு, தங்கம் காலனி, அண்ணா நகர் (மேற்கு) சென்னை 40 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைக்கு சரோஜினி நாயுடு நினைவு பரிசாக 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு காயத்ரி கூறினார்.