பி.இ. விண்ணப்பம் கடைசி தேதியை மாற்ற முடியாது: உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு


சி.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியாகாத காரணத்துக்காக அண்ணா பல்கலைக் கழகத்தில் பி.இ. விண்ணப்பம் விநியோகிக்கும் தேதியை நீட்டிக்க முடியாது என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர்
பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் நேற்று நடந்த மானியக் கோரிக்கையின்போது, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., வெங்கடேசன், "அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க, இம்மாதம், 20ம் தேதியே, கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்திருந்தாலும், சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. எனவே, விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டிக்க முடியுமா?" என்றார்.

அதற்கு பதில் அளித்த, உயர்கல்வித்துறை அமைச்சர், பழனியப்பன் கூறியதாவது: உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின் படி, மே மாதம், 20 க்குள் விண்ணப்பித்து, ஜூன் 5க்குள் ரேண்டம் எண் தயாரிக்க வேண்டும். ஜூலை 30க்குள் மாணவர் சேர்க்கை முடித்து, ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள், வகுப்புகளை தொடங்க வேண்டும்.

அதற்காகவே, 15 நாட்களுக்கு முன்னர், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை என்றாலும், மாணவர்கள், தங்களின் தேர்வு எண், ஜாதி மற்றும் இருப்பிடச் சான்றிதழ் வைத்து விண்ணப்பிக்கலாம்.

ஜூன் 5 க்குள், சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் வெளியாகலாம். அதற்காக, விண்ணப்பிக்கும் தேதியை, நீட்டிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...