மதுரையில் இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டோரிடம், "கருத்துக் கேட்பு' நிகழ்ச்சி நடப்பதாக அறிவிக்கப்பட்டதால், ஆசிரியர்கள் அதிருப்தியுற்றனர்.மதுரை மாவட்டத்தில் 2012, ஜூலையில் உபரி
ஆசிரியர்களுக்கு"பணிநிரவல்' நடந்தது. இவர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நேற்று காலை, மாநகராட்சி இளங்கோ பள்ளியில், நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அங்கு வந்த ஆசிரியர்களிடம், "இன்று கருத்துக் கேட்பு நடக்கிறது. கவுன்சிலிங் மற்றொரு நாள் நடக்கும்' என அறிவிக்கப்பட்டு, படிவம் வழங்கி பூர்த்தி செய்யும்படி" தெரிவிக்கப்பட்டது. இதனால், ஆசிரியர்கள் அதிருப்தியுற்றனர்.பள்ளிக் கல்வித் துறையினர், "பணிநிரவல் செய்யப்பட்டோர், மதுரைக்குள் மாறுதல் பெற்றுள்ளனர். மாவட்டம் விட்டு மாவட்டம் பணிமாறுதலுக்கான கவுன்சிலிங், மற்றொரு நாளில் நடத்தப்படும்,' என்றனர். ஆசிரியர்கள் கூறுகையில், "தெளிவாக அறிவிக்காததே அலைக்கழிப்புக்கு காரணம். பொதுவாக பதவி உயர்வு வழங்கிய பின் ஏற்படும் காலியிடங்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களை முதுகலை, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும், பள்ளிகளை தரம் உயர்த்தி தலைமை ஆசிரியர்களை நியமிப்பதாலும் அதிக காலியிடங்கள் ஏற்படும். அதன்பின், பணிநிரவல், பொதுமாறுதல் கவுன்சிலிங் ந