மாணவர்கள் அச்ச உணர்வை தவிர்த்து ஆசிரியர்களிடம் கேள்வி
கேட்டாலே, அதிக மதிப்பெண் வாங்கலாம், என பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில்
முதலிடம் பெற்ற மாணவர் அபினேஷ் கூறினார். திண்டுக்கல்
குள்ளனம்பட்டியை சேர்ந்தவர் எஸ்.அபினேஷ். நாமக்கல் மாவட்டம், கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், தமிழை முதல் மொழி பாடமாக எடுத்து பிளஸ் 2 படித்தார். மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மதிப்பெண்கள்: தமிழ்-196, ஆங்கிலம்- 193, இயற்பியல்-200, கணக்கு-200, உயிரியல் -200, வேதியியல்-200, மொத்தம் 1189.
இவரது தந்தை சேகர், இந்தியன் வங்கி உதவி மேலாளராக மதுரையில் பணியாற்றுகிறார். தாய் லதா, புதுக்கோட்டை மாவட்டம், செவல்பட்டி பள்ளியின் முதுநிலை ஆசிரியர். இவரது சகோதரர் விக்னேஷ், பெங்களூருவில் கம்ப்யூட்டர் பொறியாளர். அபினேஷ், பத்தாம் வகுப்பில் திண்டுக்கல் சவுந்தரராஜா வித்யாலயாவில் படித்தார். அத்தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்றார்.
பிளஸ் 2 சாதனை குறித்து மாணவன் அபினேஷ் கூறியதாவது: காலை 4 மணிக்கு எழுந்து படிப்பேன். மனம் அமைதியாகவும், படிப்பது அனைத்தும் புரியும். இரவு 10 மணிக்கு மேல் படிக்க மாட்டேன். "டிவி' பார்க்க மாட்டேன். ஆசிரியர் பாடம் நடத்தும்போது எழும் சந்தேகங்களை குறித்து வைத்துக் கொண்டு, உடனடியாக கேட்பேன். கேள்வி கேட்க அச்சப்படக்கூடாது. அன்றைய பாடத்தை அன்றே படித்து, எழுதி பார்த்தால், எளிதில் மதிப்பெண் பெறலாம். கணக்கு, வேதியியல் பாட சமன்பாடுகளை திரும்ப, திரும்ப செய்து பார்த்தேன். உயிரியல் பாடத்தில் படங்களையும் திரும்ப, திரும்ப வரைந்து பார்ப்பேன்,'' என்றார்.